பக்கங்கள்

Showing posts with label அல்லாஹ். Show all posts
Showing posts with label அல்லாஹ். Show all posts

September 3, 2010

இன்றைய து'ஆ


“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” (ஸூரத்துல் ஹஷ்ர் :10)

  • தமிழில்: றப்பானாக் ஃபிர்லனா வலி இக்வானினா அல்லதீன சபகூனா பில் ஈமானி வலா தஜ் அல் ஃபீ குலூபினா கில்லன் லில்லதீன ஆமனூ றப்பனா இன்னக்க றஊஃபுர் ரஹீம்.
  • ஒலி வடிவில் கேட்க இங்கே கிளிக்கவும். (Real Player Format)




. 
read more "இன்றைய து'ஆ"

September 1, 2010

இன்றைய திருக்குர்'ஆன் வசனம்

“நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்” (அல்-குர்ஆன் 2:216)
read more "இன்றைய திருக்குர்'ஆன் வசனம்"

இன்றைய து'ஆ

நபி (ஸல்) அவர்களின் துணைவி உம்முல் முஃமினீன் ஜுவைரியா(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் சுப்ஹீத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை(ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே) இடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்து கொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான், " ஆம்" என்றேன்.

நபி (ஸல்) அவ்ர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதி) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை)


"சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிதா நஃப்சிஹி, வ ஜீனத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாதிஹி"
ஆகியவையாகும் என்றார்கள்.
பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவிற்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவிற்கும் அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து அவனை தூயவன் என துதிக்கிறேன்.
[ சஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் 48 : ஹதீஸ் எண் 5272: அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) ]

ஒலி வடிவில் கேட்க இங்கே கிளிக்கவும். (Real Player Format)




.
read more "இன்றைய து'ஆ"

August 31, 2010

25 வாக்குறுதிகள் - ஏழாம் வாக்குறுதி

வெற்றி

அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்." (திருமறை 40:51)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்,
"...மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்."(திருமறை 30:47)

விளக்கவுரை: நம்முடைய ஈமான் சரியாக இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் நமக்கு வெற்றியையே தருவான். ஆனால் வெற்றிக்கு முன்னால் பல சோதனைகள் உண்டென்பதால் வெற்றி பெற முதல் காரணியாக பொறுமை மிக மிக அவசியமான் ஒன்று. உமர் இப்னுல் கத்தாப்(ரலி) மற்ற சஹாபாக்களைப் பார்த்து அவர்கள் இஸ்லாமை ஏற்ற பின் என்னென்ன கொடுமைகளை சகித்தனர் என்று கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதே போல கப்பாப் பின் அல் அரத்(ரலி) அவர்களைக் கேட்கும்பொழுது அவர்கள், அவரின் தழும்புகளும் காயங்களும் நிறைந்த முதுகை காட்டினார். அப்பொழுது உமர்(ரலி) அவர்கள் இது போன்றதொரு முதுகை நான் பார்த்ததில்லையே, உங்களுக்கு என்ன நேர்ந்தது என கேட்டார்.

கப்பாப்(ரலி) சங்கோஜத்துடன் விவரித்தார். "மக்காவில் அந்தக் காபிர்கள் கற்களை நெருப்பில் இட்டுச் சுடுவார்கள். தீ கொழுந்து விட்டு எரிந்து, அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருப்பார்கள். பின்னர் எனது உடைகளைக் கழற்றி விட்டு, அந்த நெருப்புக் கங்குகளின்மேல் என்னைப் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பார்கள். எனது முதுகு சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழும். எனது காயத்திலிருந்து வழிந்து விழும் நீரினால் அந்தத் தீ அணையும்" விவரித்தார் கப்பாப்(ரலி).

இதையெல்லாம் படிக்கும்போது நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி என்னவெனில், நாம் எத்தகைய சோதனைகளை கடந்து வந்துள்ளோம்? நபிகள் நாயகத்தினுடைய(ஸல்) வாழ்வினையும், நபித்தோழர்களின்(ரலி) வாழ்வினையும் காணும் பொழுது நமக்கு சொகுசான வாழ்வே கிட்டியுள்ளது. அவர்களின் சோதனைகளோடும் இன்னும் இஸ்லாத்தின் பெயரால் உலகின் பல இடங்களில் சோதனைகளை சகித்துக் கொண்டிருக்கும் மற்ற முஸ்லிம்களோடும் ஒப்பிடுகையில் நம்முடைய வாழ்வில் சோதனை என்ற சொல்லிற்கு பொருளே இல்லாமல் போகின்றது.

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு தரும் வெற்றியானது நமக்கு கிட்டும் தூரத்திலேயே உள்ளது. நம்முடைய காலத்தில் கிட்டாவிட்டாலும் நம்முடைய குழந்தைகளின் காலத்தில் கிட்டும், ஆனால், வெற்றி முஃமின்களை வந்தடைந்தே தீரும்.

என்னுரை:
இமாம் அவர்களே இவ்வளவு தெளிவாக சொல்லிய பின் என்னுரை என்று சேர்க்க எதுவுமில்லை. ஆனாலும் பொறுமை என்பது ஒரு ஆயுதம். அல்லாஹ்வினிடத்திலிருந்து எந்த உதவியை எதிர்பார்ப்பதானாலும் பொறுமை நமக்கு நிச்சயம் தேவை. அது போலவே இன்னும் பல நல் அமல்களை செய்து ஈமானை வளர்க்க வேண்டும். கீழே காணும் சில கட்டுரைகள் இத்தகைய ஈமானை வளர்க்க உதவும். நேரமிருப்பின் கட்டாயம் இன்ஷா அல்லாஹ் வாசிக்கவும்.(கட்டுரைகள் ஆங்கிலத்தில்-PDF Files)



.
read more "25 வாக்குறுதிகள் - ஏழாம் வாக்குறுதி"

August 30, 2010

25 வாக்குறுதிகள் - ஆறாம் வாக்குறுதி

அல்லாஹ்வின் அளவிட இயலா கருணை 'அர் ரஹ்மா'

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில்

"ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ, அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும்."(திருமறை 45:30)
என்று கூறுகின்றான்.

விளக்கவுரை:
அல்லாஹ்தான் அர்-‍ரஹீம்(மிக்க கருணையுடையவன்). ஒரு சராசரி மனிதனை நாம் ரஹீம் அல்லது கருணை மிக்கவன் என்றும் கூறலாம். ஆனால், அல்லாஹ்வின் கருணையும் அதன் தரமும் அலாதியானது. அல்லாஹ்வின் மேன்மைக்கேற்றவாறே அல்லாஹ்வின் கருணையும். அல்லாஹ்வின்,"இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்...", எனும்  கூற்றான‌து, முஃமின்களை கருணையின் உச்சத்திற்கு கொண்டு செல்வதை குறிப்பிடுகின்றது. இதே போல் ஒரு ஹதீத்தில் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதையும் கவனிக்கலாம், "அல்லாஹ்வின் கருணையன்றி யாரும் சுவனத்தில் நுழைய முடியாது."

என்னுரை:
ஆலிம்களின் கருத்தின்படி அல்லாஹ்வின் இரு வேறு பெயர்களான அர்‍-ரஹ்மானுக்கும், அர்-‍ரஹீமிற்கும் சில வேறுபாடுகள் உள்ளன. இரண்டும் கருணையையே குறிப்பிடுவன என்றாலும், அர்-ரஹ்மான் எனும்பொழுது அகில உலகத்திற்கும் கருணை செலுத்துகின்ற இறைவன் என்று பொருள். அஃதாவது, அல்லாஹ்வை நம்பியவர்களுக்கும் சரி, நம்பாதவர்களுக்கும் சரி ஒன்று போல அனைவருக்கும் கருணையை பொழிபவன். ஆண், பெண், முஸ்லிம், முஸ்லிமல்லாதவர், பிராணிகள் என சகல ஜீவராசிகளுக்கும் கருணை புரிவதே அர்-ரஹ்மானின் பொருளாகும். ஆனால் அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா இந்த வசனத்தில் உபயோகிப்பது அர்-‍ரஹீம் என்னும் பெயரை. இதன் பொருள் என்னவெனில், தனிப்பெருங்கருணையாகும். அஃதாவது அல்லாஹ்வின் இன்னொரு சிறப்பு மிக்க கருணை, முஃமின்க‌ளுக்கு மட்டும். ஆகிரத்தில் இந்த கருணை வெளிப்படும் இன்ஷா அல்லாஹ். இந்த கருணையே நம் அனைவரையும், கடலளவு, கடலின் நுரையளவு பாவமிருந்தாலும் அல்லாஹ்வினிடத்தில் பாவமன்னிப்பும் சுவனத்தையும் பெற்று தரும். இந்த தனிப்பெருங்கருணையே அர் ரஹீமின் வடிவமாகும். அல்லாஹ் இந்த கருணையையே மகத்தான, தெளிவான வெற்றி என்கிறான். இந்த தனிப்பெருங்கருணை கிட்ட நாம் செய்ய வேண்டியதெல்லாம் பலமான ஈமான் கொள்வதும், அதன் மேல் அமல் செய்வதும்தான். செய்வோமா?
read more "25 வாக்குறுதிகள் - ஆறாம் வாக்குறுதி"

August 29, 2010

25 வாக்குறுதிகள் - ஐந்தாம் வாக்குறுதி

அல்லாஹ்வின் பாதுகாப்பும், நெருக்கமும்

அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலா தன் திருமறையில்,

"மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்."(திருமறை 3:68)

விளக்கவுரை:
"வலி" என்ற சொல்லிற்கு அரபியில் பாதுகாவலன் அல்லது நண்பன் என்று பொருள். எனவே அல்லாஹ் இவ்விடத்தில் தன்னை முஃமின்களுக்கு பாதுகாவலானாக் கூறுகின்றான். (அல்ஹம்துலில்லாஹ். ) எனவே ஒரு முஃமினுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறெவரிடத்திலும் எந்த தேவையுமில்லை. அல்லாஹ்தான் நம் பாதுகாவலன் என்றானபின் வேறு யார் தேவை நமக்கு?

என்னுரை:
இதிலிருந்து இன்னும் பலமான ஓரு கருத்தை நாம் கவனித்தால் விளங்கும். சில சமயம் ஓர் உதவி கேட்கவோ அல்லது தகவல் சொல்லவோ நாம் ஒரு மூன்றாவது நபரை எதிர்பார்ப்போம். உதாரணத்திற்கு, நண்பர்களோடு சுற்றுலா போகவேண்டியிருந்தால் அப்பவிடம் அனுமதி வாங்க வேண்டும், எனவே தூது செல்ல தாயை அல்லது மூத்த சகோதரனையோ அல்லது சகோதரியையோ தேர்ந்தெடுப்போம். ஏன்? தந்தை மறுக்கலாம், அல்லது மேலதிக விவரம் கேட்கலாம், இன்னும் பல காரணங்கள் உண்டு. ஆனால், நம்மைப் படைத்த இறைவன் சொல்வதைக் கேளுங்க‌ள், நான் உங்கள் அருகாமையில் உள்ளேன்...ஒரு நண்பனைப் போல, பாதுகாப்பளிக்க, என்று அன்பாய் கூறுகின்றான். நண்பரிடத்தில் நாம் மூன்றாவது நபரை எதிர்பார்ப்பதில்லையே? அதே போல், அல்லாஹ்வினிடத்தில் உதவி கேட்பதற்கும், வருத்தமோ, மகிழ்ச்சியோ, அதை பகிர்வதிற்கும், எல்லாவற்றிற்கும் நன்றி கூறுவதற்கும் இடையினில் வேறெவரும் இல்லாததே...அல்லாஹ் நமக்கு அளித்த சிறப்பாகும். எனவே அல்லாஹ்விற்கு வேறெதையும் இணை வைக்காமல் நடுவில் யாரை சேர்ப்பது என்ற சிந்தனை இல்லாமல் அன்புடனும், இறைஞ்சும் மனத்துடனும் அதிகமதிகம் நினையுங்கள். இணைவைப்பதிலிருந்தும் நம்மை மீட்டு, நம் ஈமானை முழுமையாக்கி முஸ்லிமாகவே வாழவைத்து, முஸ்லிமாகவே மரணிக்க வைப்பானாக. ஆமீன்.



.
read more "25 வாக்குறுதிகள் - ஐந்தாம் வாக்குறுதி"

25 வாக்குறுதிகள் - நான்காம் வாக்குறுதி

ஃபத்ல் - அல்லாஹ்வின் அருளும், கருணையும்

அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலா தன் திருமறையில்,

"...அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்." (திருமறை 3:152)

விளக்கவுரை:
அல்லாஹ்வின் அருளானது மிக மிக விசாலமானது. நம்முடைய தகுதியையும் தாண்டி அல்லாஹ்வின் அருளானது மிஞ்சி நிற்கும் ஒன்று. சில சமயங்களில் அல்லாஹ்விடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அது அதிகமாக கிடைக்கின்றது. இஃதே முஃமின்களின் மேல் அல்லாஹ்வின் கருணையும், அருளுமாகும்.

என்னுரை:
அல்லாஹ்வின் அருள் கிட்ட நாம் மந்திரம் செய்ய வேண்டியதில்லை. அது மந்திரம் போன்றே நடக்கும் என நம்பி கிடக்க வேண்டியதில்லை. அல்லாஹ்வின் அருளானது, உங்களுக்கு ஒரு கவலை நேரும்போதும் உண்டு, மேலும் உங்களுக்கு ஓர் கஷ்டமோ அல்லது ஊனமோ ஏற்படும்போதும் உண்டு. ஏனெனில் முஃமின்களுக்கு நல்லதை நாடும்பொழுது, பெருங்கேட்டிலிருந்து தவிர்த்து சிறிய காயம் மூலம் ஓர் வாட்டம் தந்து அதன் மூலம் நரக நெருப்பினை தடுப்பவன் அல்லாஹ். நாம் எண்ணிட இயலாத வழிகளில் நமக்கு நல்லதை நாடுபவன் அவன் மட்டுமே. அல்லாஹ்வினிடத்தில் ததும்பி நிற்கும் இந்த அருளையும் கருணையையும் பெற நாம் செய்ய வேண்டியது என்ன? முனாஃபீக்குத்தனம் இல்லாத தூய்மையான ஈமான் கொள்வதே ஆகும். ஆதமின்(அலைஹ்) மக்களான நாம் தவறு செய்பவர்களே...ஆனால் தவ்பா செய்து அல்லாஹ்வின் அருகாமையை இறைஞ்சுவதன் மூலம் இன்னமும் ஈமான் பலப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ், எல்லாம் வல்ல இறைவனின் அருளும் கருணையும் நம் வாழ்வில் நிரம்பிட மாசற்ற ஈமானை நம் மனதில் விதைப்போமாக.



.
read more "25 வாக்குறுதிகள் - நான்காம் வாக்குறுதி"

25 வாக்குறுதிகள் - மூன்றாம் வாக்குறுதி

அல்லாஹ்வின் அருகாமை

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"...மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான்..." (திருமறை 8:19)

விளக்கவுரை:
எப்பொழுது எல்லாம் வல்ல இறைவன்,"அல்லாஹ் முஃமின்களோடு இருக்கின்றான்" என்று கூறிவிட்டானோ அதன்பின் முஃமின்களுக்கு வேறு யாருடைய தயவும் தேவை இல்லை. ரசூலுல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்,"அல்லாஹ்வைப் பற்றிய எண்ணத்துடன் எப்பொழுதும் இருங்கள், அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான். அல்லாஹ்வை சதா நேரமும் நினைத்துக் கொண்டே இருங்கள், உங்களுக்கு முன் அவனிருக்க காண்பீர்கள்". அல்லாஹ் நம் அருகாமையில் இருந்து நமக்கு தேவையானவற்றை நம் அமல்களுக்கு ஏற்ப தந்தருள்வான்.

என்னுரை:
அல்லாஹ் நம்முடன் இருப்பது என்பதை பௌதீக முறையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதன் பொருள் அல்லாஹ்வின் உதவியும், அவனின் உதவியும், அவனின் பாவமன்னிப்பும், அவனின் ரஹ்மத்தும், அவனளிக்கும் ஹிதாயத்தும் நம்மருகிலேயே உள்ளன என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் இத்தகைய அருகாமை எப்பொழுது கிட்டும், நாம் உண்மையான் முஃமின்களாக, இன்னும் இன்னும் ஈமானை மெருகுபடுத்திக் கொள்பவர்களாக இருக்கும்போது மட்டுமே. அல்லாஹ்வின் அருகாமை எல்லா முஸ்லிகளுக்கும் உண்டுதானே என்று ஹராமான முறையில் வாழ்க்கையை நடத்துவதோ, தொழுகை, சதகா, ஜகாத், நோன்பு என்று மற்ற விஷயங்களை விட்டுவிடுவதாலோ எந்த ஒரு பயனும் இல்லை. ஏனெனில் ஈமான் என்பதும் அதன் மேலான அமல் என்பதும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது. ஈமானில்லாத அமலாலோ அல்லது அமலில்லாத ஈமானாலோ பிரயோஜனமில்லை. அல்லஆஹ்வின் உதவி வேண்டுவோரே, உங்கள் ஈமானை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன் மேல சிறந்த அமல்களை செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் வாக்குறுதி உங்களை மறுமையில் வெற்றி பெறச் செய்யும்.



.
read more "25 வாக்குறுதிகள் - மூன்றாம் வாக்குறுதி"

25 வாக்குறுதிகள் - இரண்டாம் வாக்குறுதி

ஒளி ‍- அன் நூர்

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) “இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்). (திருமறை 57:12)

விளக்கவுரை:
கியாமத் நாளன்று முழுதும் இருட்டானதாக இருக்கும். அந்த இருளில் நம்மனைவரையும்(முஃமின்கள்) ஓர் பாலத்தை கடக்க சொல்வார்கள். அந்த பாலமானது ஓர் தலைமுடியை விட மெலிதானதாகவும், கத்தியை விட கூர்மையானதாகவும் இருக்கும். அதன் மேல் ஒளியும் இருக்காது, எனவே அல்லாஹ் தரும் ஒளியை தவிர வேறெதுவும் கொண்டு நம்மால் அந்த பாலத்தை கடக்க முடியாது. அல்லாஹ் அவ்வேளையில் நம்மில் ஒவ்வொருவருக்கும் தரும் ஒளியானது இவ்வுலகில் நாம் எவ்வளவு ஒளியை நம் இதயத்தில் சுமந்தோமோ (ஈமான் மற்றும் அதன் மேலான அமல் என்னும் ஒளி) அந்த ஒளிக்கே ஈடாக இருக்கும். இவ்வுலகில் தெய்வீக ஒளியாக நம் மனதில் இருக்கில் ஈமான் அன்று இயல்பான, உண்மையான ஒளியாக நம் கண் முன் வரும்.

நம்முடைய ஈமானைப் பொறுத்தே அந்த ஒளியானது மிகுந்தும் குறைந்தும் காணப்படும். சிலருக்கு அவ்வொளி எவ்வளவு பிரகாசமாக இருக்கும் எனில், அவர்கள் நிமிடத்தில் ஓடியே அந்த பாலத்தை கடந்து விடுவர். சிலர் நடந்து போகக் கூடிய அளவே ஒளி தரப்படுவர். சிலரின் ஒளியோ இடைவெளிகளில் மின்னிட்டுக் கொண்டிருக்கும். அவ்வாறானவர்கள் ஒவ்வொரு முறையும் நின்று, மீண்டும் நல்ல வெளிச்சம் கிட்டிய பிறகே போக இயலும். மேலும் சிலரோ...பாலத்தை கடக்கும் முன்னரே அவ்வொளி மறைந்து போகும். அவர்களால் கடக்க இயலாது.


என்னுரை:
எனவே இந்த விளக்கவுரை படித்தபின் நம்மில் தோன்றும் பயம் என்ன? யா அல்லாஹ், எனக்கும் என் தாய் தந்தையர்க்கும் மற்றும் சகல குடும்பத்தினர்க்கும் விலகாத பிரகாசமான ஒளி தருவாயாக என்னும் து'ஆதான். ஆனால் வெறும் து'ஆவில் காரியம் நடந்துவிடுமா? அல்லாஹ் தெளிவாக தன் திருமறையில், அந்த ஒளி பெற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் கூறி விட்டான். திண்ணமாக, பலமான ஈமானும், அதன் மேலான நல் அமல்களும் இல்லாமல் நம்மால் அந்த ஒளியை பெற இயலாது. அல்லாஹ் மனமிரங்கினால் ஒழிய நமக்கு அது கிட்டது. எனவே இன்னும் மீதமிருக்கும் நம் வாழ்நாட்களில் இன்ஷா அல்லாஹ் நம்முடைய மனதில் இருக்கும் ஈமான் என்னும் ஒளியை சுடர் விடச் செய்வோமாக. இந்த ரமதானின் கடைசி பத்து நாட்களிலும் இன்ஷா அல்லாஹ் எவ்வளவு தவ்பா செய்ய இயலுமோ அத்தனை தவ்பா செய்து மீண்டும் அந்த பாவங்கள் செய்யாமல் நம் ஈமானை காப்போமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலா நம்மின் இந்த நாட்டத்தை அங்கீகரித்து நம்மை மறுமையில் ஒளி நிறைந்தவர்களாக ஆக்குவானாக. ஆமீன். ஆமீன். அல்லாஹும்ம ஆமீன்.



.
read more "25 வாக்குறுதிகள் - இரண்டாம் வாக்குறுதி"

இன்றைய திருக்குர்'ஆன் வசனம்

“(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.” (அல் பகறா:136)



.
read more "இன்றைய திருக்குர்'ஆன் வசனம்"

இன்றைய து'ஆ


“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய். எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (அல் பகறா:127: 128)



.
read more "இன்றைய து'ஆ"

August 27, 2010

இன்றைய திருக்குர்'ஆன் வசனம்

"எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்." (ஸூரத்துன்னிஸா : 17)



.
read more "இன்றைய திருக்குர்'ஆன் வசனம்"

August 26, 2010

சிந்தனைக்கு இன்று

அப்துல்லாஹ் இப்னு மசூத்(ரலி) அவர்கள் கூறினார்கள்,"பாவங்களிலேயே மிக மட்டமான பாவம் எதுவெனில், ஒரு மனிதன் தன் சகோதரரிடம் "அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்" என்று சொல்லும்போது அந்த சகோதரர் அவருக்கு "நீர் உம்மைப் பற்றி முதலில் வருத்தப்படும்" என பதில் கூறுவது".

அபூ பக்ர் அத் தய்னூரி, அல் முஜாலஸா வ ஜவாஹிர் இதழ், கட்டுரை எண் 2619



.
read more "சிந்தனைக்கு இன்று"

இன்றைய திருக்குர்ஆன் வசனம்

"அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்." (ஸூரத்துல் பய்யினா: 8)



.
read more "இன்றைய திருக்குர்ஆன் வசனம்"

August 24, 2010

சிந்தனைக்கு இன்று...

மகிழ்ச்சியும், கஷ்டமும், அடி பணிவதும் மற்றும் பாவமும்

வுஹைப் பி அல் வார்த்(ரஹி) கூறியதாவது,"திண்ண‌மாக எப்பொழுது அல்லாஹ் ஓர் அடிமையை மேன்மைபடுத்த விரும்புகின்றானோ(அவனின் நல் அமல்களுக்காக), பின் அல்லாஹ் அவனின் வாழ்வாதாரத்தில் குறை ஏற்படுத்துகின்றான், அவனின் உடலில் நோயை ஏற்படுத்துகின்றான் மேலும் பயம் கலந்த ஓர் வாழ்வை அவனுக்கு தருகின்றான்(இவையனைத்தும் அவனின் பாவங்களை அழிக்கின்றன). மரணம் வரை வாழ்வு இப்படியே இருக்கின்றது, பின்பும் ஏதேனும் பாவங்கள் மிச்சமிருப்பின் அவற்றிற்காக வேண்டி மரண நிமிடங்களை கடுமைப்படுத்துகின்றான், இதனால் அல்லாஹ்வின் முன் செல்லும் வேளையில் அந்த அடியானிடம் பாவங்கள் எதுவும் மிஞ்சுவதில்லை.

அதே போல், எந்த அடியான் அல்லாஹ்வின் முன்னால் ஒரு பொருட்டும் இல்லையோ(அவனின் அடிபணியாத குணம் மற்றும் தீய அமல்களினால்) அவனுக்கு அல்லாஹ் நல்ல உடல்நிலையை தருகின்றான், அவனுடைய வாழ்வாதாரத்தை பெருக்குகின்றான், நம்பிக்கையான் ஒரு வாழ்வை அவனுக்கு தருகின்றான்(இதன் மூலம் அவனின் எல்லா நல் அமல்களுக்கும் இந்த வாழ்விலேயே கூலி கிடைத்து விடுகின்றது) மரணம் வரை வாழ்வு இப்படியே இருக்கின்றது. பின்பும் ஏதேனும் நல் அமல்கள் மிஞ்சினால் அல்லாஹ் அவனுடைய மரண நிமிடங்களை எளிதாக்குகின்றான் இதனால் அல்லாஹ் முன் செல்லும் வேளையில் அந்த அடியானிடம் நல் அமல்கள் எதுவும் மிஞ்சுவதில்லை"

'அபூ பக்ர் அத் தய்னூரி, அல் முஜாசலாஹ் வ ஜவாஹிர் அல் இல்ம்' இதழ் கட்டுரை எண்:2865.



.
read more "சிந்தனைக்கு இன்று..."