பக்கங்கள்

Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts

August 31, 2010

இன்றைய மேற்கோள்

அல்ஹஸன் அல் பஸ்ரி (ரஹி) அவர்கள் கூறினார்கள்,

"ஒரு மனிதன் ஞானத்தை நாடினானென்றால் விரைவிலேயே அந்த ஞானமானது அவனின் பணிவிலும், பார்வையிலும், அவனுடைய நாவின் மூலமாகவும், அவன் கரங்கள் மூலமாகவும், அவனின் தொழுகையிலும், அவனின் பேச்சிலும் மற்றும் உலகத்தின் மீதான குறைவான நாட்டத்திலும் எதிரொலிக்கும். மேலும் ஒரு மனிதன் இல்மில் (மார்க்க ஞானம்) சிறிதேனும் கற்றானென்றாலும் அதை அவன் செயல்களில் எதிரொலிப்பதே, இந்த உலகும் அதனுள் அடங்கிய எல்லாவற்றையும் விட மதிப்பானதாகும் . அத்தனை செல்வம் அவன் கொண்டிருந்தாலும் மறுமைக்கென அவன் அதனை பரிமாற்றம் செய்து கொள்வான்"
இப்னு அல் முபாரக், அத் துஹ்து வ அல் ரகா'இக் பாகம் 1 பக்கம் 156



.
read more "இன்றைய மேற்கோள்"

August 27, 2010

சிந்தனைக்கு இன்று

அதா'அ(ரஹி) அவர்கள் கூறினார்கள். ஓர் இளைஞன் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் வீட்டிற்கு போவதையும் அவர்களிடம் நிறைய சந்தேகம் கேட்பதுமாக இருந்தான். அன்னை ஆயிஷா(ரலி) அவர்களும் அவனுக்கு கற்பித்துக் கொண்டிருந்தார்கள். ஓர் நாள் எப்பொழுதும் போல அவ்விளைஞன் அன்னையிடம் சென்று சில சந்தேகங்களை கேட்டான், அதற்கு அன்னையவர்களோ,"மகனே இதுவரை நீ என்னிடம் கற்றதை செயலில் சேர்த்துவிட்டாயா (கற்ற அறிவை அமல்களில் கொண்டு வ‌ந்தாயா)?" என்று கேட்டனர். அதற்கு அந்த இளைஞன், "இல்லை அம்மா...நான் இன்னும் அதன் மேல் அமல் செய்யவில்லை" என்று கூறினார். அதனைக் கேட்ட ஆயிஷா(ரலி) அன்னையவர்கள், "மகனே பின், எனக்கும் உனக்கும் எதிராய் அல்லாஹ்வினிடத்தில் சாட்சி தயாரிக்க ஏன் விரும்புகிறாய்?" என்றனர்.


அல் கதீப் அல் பாக்தாதியினுடைய இக்திதா அல் இல்ம் அல் அமால் என்னும் புத்தகத்தில் பக்கம் 92

சிந்திக்க: கற்றது கடுகளவே ஆயினும் அதனை அமல் செய்யாமல் அடுத்தடுத்து ஞானத்தை வளர்க்கப் பார்ப்பது அல்லாஹ்வினிடத்தில் நமக்கெதிரான சாட்சியாய் அமைந்துவிடும்!!



.
read more "சிந்தனைக்கு இன்று"

August 26, 2010

இன்றைய து'ஆ


“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்” (ஸூறா ஹூது:47)

  • தமிழில்: றப்பி இன்னீ அ'ஊஜுபிக அன் அஸ்அலக மா லய்ஸ லி பிஹி இல்முன் வ இல்லா தஃக்ஃபிர்லீ பிஹி இல்முன் வ இல்லா தஃக்ஃபிர்லி வ தர்ஹம்னி அகும் மினல் காசிரீன்
  • ஒலி வடிவில் கேட்க இங்கே கிளிக்கவும். (RealPlayer Format)


.
read more "இன்றைய து'ஆ"