பக்கங்கள்

August 29, 2010

25 வாக்குறுதிகள் - ஐந்தாம் வாக்குறுதி

அல்லாஹ்வின் பாதுகாப்பும், நெருக்கமும்

அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலா தன் திருமறையில்,

"மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்."(திருமறை 3:68)

விளக்கவுரை:
"வலி" என்ற சொல்லிற்கு அரபியில் பாதுகாவலன் அல்லது நண்பன் என்று பொருள். எனவே அல்லாஹ் இவ்விடத்தில் தன்னை முஃமின்களுக்கு பாதுகாவலானாக் கூறுகின்றான். (அல்ஹம்துலில்லாஹ். ) எனவே ஒரு முஃமினுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறெவரிடத்திலும் எந்த தேவையுமில்லை. அல்லாஹ்தான் நம் பாதுகாவலன் என்றானபின் வேறு யார் தேவை நமக்கு?

என்னுரை:
இதிலிருந்து இன்னும் பலமான ஓரு கருத்தை நாம் கவனித்தால் விளங்கும். சில சமயம் ஓர் உதவி கேட்கவோ அல்லது தகவல் சொல்லவோ நாம் ஒரு மூன்றாவது நபரை எதிர்பார்ப்போம். உதாரணத்திற்கு, நண்பர்களோடு சுற்றுலா போகவேண்டியிருந்தால் அப்பவிடம் அனுமதி வாங்க வேண்டும், எனவே தூது செல்ல தாயை அல்லது மூத்த சகோதரனையோ அல்லது சகோதரியையோ தேர்ந்தெடுப்போம். ஏன்? தந்தை மறுக்கலாம், அல்லது மேலதிக விவரம் கேட்கலாம், இன்னும் பல காரணங்கள் உண்டு. ஆனால், நம்மைப் படைத்த இறைவன் சொல்வதைக் கேளுங்க‌ள், நான் உங்கள் அருகாமையில் உள்ளேன்...ஒரு நண்பனைப் போல, பாதுகாப்பளிக்க, என்று அன்பாய் கூறுகின்றான். நண்பரிடத்தில் நாம் மூன்றாவது நபரை எதிர்பார்ப்பதில்லையே? அதே போல், அல்லாஹ்வினிடத்தில் உதவி கேட்பதற்கும், வருத்தமோ, மகிழ்ச்சியோ, அதை பகிர்வதிற்கும், எல்லாவற்றிற்கும் நன்றி கூறுவதற்கும் இடையினில் வேறெவரும் இல்லாததே...அல்லாஹ் நமக்கு அளித்த சிறப்பாகும். எனவே அல்லாஹ்விற்கு வேறெதையும் இணை வைக்காமல் நடுவில் யாரை சேர்ப்பது என்ற சிந்தனை இல்லாமல் அன்புடனும், இறைஞ்சும் மனத்துடனும் அதிகமதிகம் நினையுங்கள். இணைவைப்பதிலிருந்தும் நம்மை மீட்டு, நம் ஈமானை முழுமையாக்கி முஸ்லிமாகவே வாழவைத்து, முஸ்லிமாகவே மரணிக்க வைப்பானாக. ஆமீன்..

No comments:

Post a Comment