பக்கங்கள்

Showing posts with label அல் ஹஸன் அல் பஸ்ரி. Show all posts
Showing posts with label அல் ஹஸன் அல் பஸ்ரி. Show all posts

August 31, 2010

இன்றைய மேற்கோள்

அல்ஹஸன் அல் பஸ்ரி (ரஹி) அவர்கள் கூறினார்கள்,

"ஒரு மனிதன் ஞானத்தை நாடினானென்றால் விரைவிலேயே அந்த ஞானமானது அவனின் பணிவிலும், பார்வையிலும், அவனுடைய நாவின் மூலமாகவும், அவன் கரங்கள் மூலமாகவும், அவனின் தொழுகையிலும், அவனின் பேச்சிலும் மற்றும் உலகத்தின் மீதான குறைவான நாட்டத்திலும் எதிரொலிக்கும். மேலும் ஒரு மனிதன் இல்மில் (மார்க்க ஞானம்) சிறிதேனும் கற்றானென்றாலும் அதை அவன் செயல்களில் எதிரொலிப்பதே, இந்த உலகும் அதனுள் அடங்கிய எல்லாவற்றையும் விட மதிப்பானதாகும் . அத்தனை செல்வம் அவன் கொண்டிருந்தாலும் மறுமைக்கென அவன் அதனை பரிமாற்றம் செய்து கொள்வான்"
இப்னு அல் முபாரக், அத் துஹ்து வ அல் ரகா'இக் பாகம் 1 பக்கம் 156



.
read more "இன்றைய மேற்கோள்"

August 29, 2010

சிந்தனைக்கு இன்று...

இமாம் அல் ஹஸன் அல் பஸ்ரி(ரஹி) அவர்கள் கூறியதாக காணப்படும் குறிப்பு.

வெளியுலகிற்கு நீங்கள் காட்டும் தோற்றத்திற்கும் மனதினுள் உங்களின் தோற்றத்திற்கும் வித்தியாசம் கிட்டுமாயின், அதையே அன் ‍ நிஃபாக் (முனாஃபீக்குத்தனம்) என்று நாங்கள் கருதுவோம்.. அஃதே கருத்தை, நீங்கள் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கும்போதும் கருதுவோம், உங்களின் வருகையிலும், பிரிவிலும் கூட அது எதிரொலிக்கும். மேலும், அன் நிஃபாக்கின் வேர் எதுவெனில், "பொய்" ஆகும்.

[அபூ பக்ர் அல் கரா'இதி மாசவி அல் அக்லாக் வ மத்மூமிஹா பக்கம் 62]



.
read more "சிந்தனைக்கு இன்று..."

இன்றைய மேற்கோள்

வாழ்வின் திசை பற்றி...

அல் ஹஸன் அல் பஸ்ரி(ரஹி) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது அவரின் சில தோழர்கள் வந்து அவரிடம், "அபூ சயீதே, எங்களுக்கு உபயோகமளிக்கக்கூடிய வார்த்தைகள் சில கூறு", என்று கோரினர். அதற்கு வந்த பதில்,

"மூன்று வாக்கியங்களைக் கொண்டு உங்களை நான் ஆயத்தப்படுத்துவேன். அதன்பின் நான் எந்த நிலையில் இருக்கின்றேனோ அதே நிலையில் என்னை விட்டுவிடவும்.
ஒன்று, உங்களுக்கு தடுக்கப்பட்ட பொருட்களிலிருந்து தூரமான மக்களை விடவும் நீங்கள் தூரமாயிருங்கள்;
இரண்டு, உங்களுக்கு ஹலாலாக்கப்பட்ட நல் அமல்களில் மற்றெல்லோரையும் விட அதிகமாக நீங்கள் பங்கு வகியுங்கள்;
மூன்று, நினைவில் வையுங்கள், உங்களின் வாழ்வில் எல்லா நேரத்திலும் இரண்டு காலடி மட்டுமே நீங்கள் வைக்க இயலும், ஒரு அடி உங்கள் சார்பாகவும், மற்றொரு அடி உங்களுக்கெதிரானதாகவும், எனவே எங்கிருந்து வருகிறீர்கள், எங்கே போகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்"

அபூ ந'யாம் ஹியாஹ் அல் அவ்லியாஹ் 2:154



.
read more "இன்றைய மேற்கோள்"

August 25, 2010

இன்றைய மேற்கோள்

அல் ஹஸன் அல் பஸ்ரி(ரஹி) அவர்கள் கூறியது யாதெனில்,

"கடினப்பட்ட இதயம், (மனம் வருந்தி அழுதிடாத) வறண்ட கண்கள், (இந்த வாழ்வைப் பற்றிய) அபரிமிதமான நம்பிக்கை, பேராசை, மேலும் இந்த உலகின் செல்வங்களை அதிகதிகமாக சேகரிக்கும் நோக்கம், இவையனைத்தும் பாவங்களுக்கு அடிமையான ஒருவனின் குறியீடுகள், "

இப்னு அபி அத் துன்யா, கிதாப் அஜ் ஜுஹ்து இதழ், கட்டுரை எண் 36.



.
read more "இன்றைய மேற்கோள்"