பக்கங்கள்

Showing posts with label இதயம். Show all posts
Showing posts with label இதயம். Show all posts

August 30, 2010

இன்றைய மேற்கோள்

இதயத்தின் தூய்மை

இதயம் நோய்படக்கூடும், அதனால் உடலும் நோயுறும், மேலும் அதன் நிவாரணம் தவ்பாவும்(பாவ மன்னிப்பு கோருதல்), பாதுகாப்பும்(வரம்பு மீறுதலிலிருந்து) ஆகும். ஒரு கண்ணாடி துருபிடிப்பதைப் போலவே இதயமும் துர் பிடிக்கின்றது, மீண்டும் அதை தெளிவாக்க அல்லாஹ்வின் நினைவு உதவிடும். உடல் நிர்வாணமடைவதைப் போலவே மனதும் நிர்வாணமடைகின்றது, அதனை அழகாக்க தக்வா(அல்லாஹ்வை அஞ்சுதல்) உதவிடும். வயிற்றுக்கு பசிப்பதைப் போலவே இதயத்திற்கும் வசியும் தாகமும் ஏற்படும், அதன் உணவும் நீரும் இல்மும், அன்பும்(அல்லாஹ்விற்காக), அல்லாஹ்வை சார்ந்திருப்பதும், தவற்றிற்கு வருந்துவதும் மற்றும் அடி பணிவதுமாகும்(அல்லஹ்வின் சட்டங்களுக்கு)

இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஜிய்யாவின் 'அல் ஃபவாயித்' எனும் புத்தகத்திலிருந்து.







.
read more "இன்றைய மேற்கோள்"

August 29, 2010

இன்றைய மேற்கோள்

யஹ்யா பின் மு'ஆத்(ரஹி) அவர்கள் கூறியதாவது, "ஒர் இதயத்துக்கு நிவாரண மருந்து எதுவெனில், திருக்குர்'ஆனை ஓதுவதும், அதன் பொருளின் மேல் சீரிய சிந்தனை செய்வதும், நிரம்பாத ஓர் வயிற்றை கொள்வதும், (கியாம் அல் லைல் அல்லது தஹஜ்ஜுத்) இரவில் தனித்து வெகு நேரம் தொழுவதும், சுஹூரின் நேரத்தில் அல்லாஹ்வை மட்டுமே நினைவில் கொள்வதும் மேலும் நல் அமல்கள் செய்யும் ஆன்மாக்களுடன் சினேகிதம் கொள்வதும் ஆகும்."



.
read more "இன்றைய மேற்கோள்"

August 25, 2010

இன்றைய மேற்கோள்

அல் ஹஸன் அல் பஸ்ரி(ரஹி) அவர்கள் கூறியது யாதெனில்,

"கடினப்பட்ட இதயம், (மனம் வருந்தி அழுதிடாத) வறண்ட கண்கள், (இந்த வாழ்வைப் பற்றிய) அபரிமிதமான நம்பிக்கை, பேராசை, மேலும் இந்த உலகின் செல்வங்களை அதிகதிகமாக சேகரிக்கும் நோக்கம், இவையனைத்தும் பாவங்களுக்கு அடிமையான ஒருவனின் குறியீடுகள், "

இப்னு அபி அத் துன்யா, கிதாப் அஜ் ஜுஹ்து இதழ், கட்டுரை எண் 36.



.
read more "இன்றைய மேற்கோள்"