“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமலானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
.
ஸியாம்-- 'நோன்பு' என்பது அரபி பாஷையின் இலக்கணத்தின்படி ஏதும் ஒரு பொருளிலிருந்து விலகியிருப்பதாகும். செவிக்கும் பார்வைக்கும் நோன்பானது (நோன்பின் காலத்தில் நாம் எவ்வாறு உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் விலகி இருக்கிறோமோ அவ்வாறே) அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்களை செய்வதிலுமிருந்து அவற்றை (கண், காது) விலக்கி வைப்பதாகும்: சுலைமான் மூசா (ரஹி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன்.
"தொழுகையின் அழைப்பிலும், முதல் வரிசையிலும் (கிடைக்கும் சிறப்புகளை) மனிதர்கள் அறிந்து கொள்வார்களேயானால் அதன்பிறகு அதற்காக சீட்டுப் போடுவதை தவிர வேறு வழியைக் காணமாட்டார்கள், (ஆகவே) அதற்காக சீட்டுப்போடுவார்கள். முன்னால் முந்திய நேரத்தில் வருவதன் (பலனை) மக்கள் அறிந்தால் அதன்பால் முந்திவிடுவார்கள். இஷாத் தொழுகையிலும் ஸுபுஹுத் தொழுகையிலும் (கிடைக்கும் நன்மைகளை) அவர்கள் அறிவார்களேயானால், அவ்விரு தொழுகை(யை நிறைவேற்றுவதற்)க்காக நடக்க இயலாதவர்கள் அவர்களது கைகள், கால்களில், அல்லது பின்பாகத்தில் நகர்ந்தவர்களாக வருவர்" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முத்தபகுன் அலைஹி)