பக்கங்கள்

August 30, 2010

25 வாக்குறுதிகள் - ஆறாம் வாக்குறுதி

அல்லாஹ்வின் அளவிட இயலா கருணை 'அர் ரஹ்மா'

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில்

"ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ, அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும்."(திருமறை 45:30)
என்று கூறுகின்றான்.

விளக்கவுரை:
அல்லாஹ்தான் அர்-‍ரஹீம்(மிக்க கருணையுடையவன்). ஒரு சராசரி மனிதனை நாம் ரஹீம் அல்லது கருணை மிக்கவன் என்றும் கூறலாம். ஆனால், அல்லாஹ்வின் கருணையும் அதன் தரமும் அலாதியானது. அல்லாஹ்வின் மேன்மைக்கேற்றவாறே அல்லாஹ்வின் கருணையும். அல்லாஹ்வின்,"இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்...", எனும்  கூற்றான‌து, முஃமின்களை கருணையின் உச்சத்திற்கு கொண்டு செல்வதை குறிப்பிடுகின்றது. இதே போல் ஒரு ஹதீத்தில் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதையும் கவனிக்கலாம், "அல்லாஹ்வின் கருணையன்றி யாரும் சுவனத்தில் நுழைய முடியாது."

என்னுரை:
ஆலிம்களின் கருத்தின்படி அல்லாஹ்வின் இரு வேறு பெயர்களான அர்‍-ரஹ்மானுக்கும், அர்-‍ரஹீமிற்கும் சில வேறுபாடுகள் உள்ளன. இரண்டும் கருணையையே குறிப்பிடுவன என்றாலும், அர்-ரஹ்மான் எனும்பொழுது அகில உலகத்திற்கும் கருணை செலுத்துகின்ற இறைவன் என்று பொருள். அஃதாவது, அல்லாஹ்வை நம்பியவர்களுக்கும் சரி, நம்பாதவர்களுக்கும் சரி ஒன்று போல அனைவருக்கும் கருணையை பொழிபவன். ஆண், பெண், முஸ்லிம், முஸ்லிமல்லாதவர், பிராணிகள் என சகல ஜீவராசிகளுக்கும் கருணை புரிவதே அர்-ரஹ்மானின் பொருளாகும். ஆனால் அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா இந்த வசனத்தில் உபயோகிப்பது அர்-‍ரஹீம் என்னும் பெயரை. இதன் பொருள் என்னவெனில், தனிப்பெருங்கருணையாகும். அஃதாவது அல்லாஹ்வின் இன்னொரு சிறப்பு மிக்க கருணை, முஃமின்க‌ளுக்கு மட்டும். ஆகிரத்தில் இந்த கருணை வெளிப்படும் இன்ஷா அல்லாஹ். இந்த கருணையே நம் அனைவரையும், கடலளவு, கடலின் நுரையளவு பாவமிருந்தாலும் அல்லாஹ்வினிடத்தில் பாவமன்னிப்பும் சுவனத்தையும் பெற்று தரும். இந்த தனிப்பெருங்கருணையே அர் ரஹீமின் வடிவமாகும். அல்லாஹ் இந்த கருணையையே மகத்தான, தெளிவான வெற்றி என்கிறான். இந்த தனிப்பெருங்கருணை கிட்ட நாம் செய்ய வேண்டியதெல்லாம் பலமான ஈமான் கொள்வதும், அதன் மேல் அமல் செய்வதும்தான். செய்வோமா?

No comments:

Post a Comment