பக்கங்கள்

Showing posts with label மறுமை. Show all posts
Showing posts with label மறுமை. Show all posts

September 2, 2010

25 வாக்குறுதிகள் - ஒன்பதாம் வாக்குறுதி

அவர்களின் (முஃமின்களின்) மேல் நேசத்தை ஏற்படுத்துவான்.

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்."(திருமறை 19:96)

விளக்கவுரை:
திருக்குர்'ஆனிற்கு விளக்கவுரை எழுதும் ஆசிரியர்கள் கூறுவது என்னவெனில் நீங்கள் உங்களின் உள்ளத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்புகையில், அல்லாஹ் முஃமின்களின் இதயத்தை உங்களை நோக்கி திரும்ப வைக்கின்றான்.

இன்னுமொரு பொன்மொழி என்னவெனில், "நீவிர் மக்களை இன்பப்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வை கோபப்பட வைத்தால் அல்லாஹ் உங்கள் மீது கோபம் கொள்வதோடு மட்டுமல்லாமல் உலகமக்களையும் உங்கள் மேல் கோபம் கொள்ள வைப்பான். நீங்கள் அல்லாஹ்வின் மகிழ்ச்சியை பெறவேண்டி உலக மக்களின் வெறுப்பை சம்பாதித்தால் அல்லாஹ் உங்களிடம் அன்பு கொள்வதோடு உலக மக்களையும் உங்களிடம் நேசம் கொள்ளச் செய்வான்."

நம்முடைய தேவை இதுதான், முஃமின்களின் இதயம் நம்மிடம் நேசம் கொள்ளவேண்டும். எனவே அல்லாஹ்வை நேசியுங்கள். அல்லாஹ் அவனின் அடியான்கள் உங்களை நேசிக்க வைப்பான். இந்த நேசமானது அல்லாஹ்விடம் நேர்மையாய் உண்மையாய் இருக்கும் முஃமின்களிடமிருந்து மட்டுமே. முஸ்லிமல்லாதவர்களோ அல்லது நேர்மையற்ற வெறும் பேச்சுக்கென வாழும் முஸ்லிம்களிடமிருந்தோ அல்ல.

என்னுரை:
பாவமன்னிப்பு தேடுவதிலும், அல்லாஹ்வின் அருகாமையை தேடுவதிலும் மிக முக்கியமான ஒரு படி எதுவெனில் அவனை நேர்மையுடன், ஒழுங்குடன், மனத்தூய்மையுடன் துதிக்கும் முஃமின்களின் நேசத்தை பெறுவது. அவர்களின் கூட்டங்களில் பங்கு கொள்வதே நமக்கு பேராதாயமாகும். உலக மக்களுக்காக அல்லஹ்வையும் அவனின் மார்க்கத்தையும் சமரசம் செய்து கொள்ளும் பல பேரை இன்றைய உலகில் நாம் காணமுடியும். அவர்களின் முகத்தில் ஒளிரும் நூரைக் கொண்டே அல்லஹ்விடம் அவர்களின் மதிப்பை தெரிந்துகொள்ள முடியும். எனவே அல்லாஹ்வின் வாக்குறுதிகள் உங்கள் வாழ்விலும் ஈடேற வேண்டுமென்றால், அவனின் அருகாமையும் பாவ்மன்னிப்பும், சுவனமும் கிட்ட வேண்டுமென்றால், நல்மக்களின் தோழமையை பெறுங்கள். அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடுங்கள். உலக ஆதாயத்திற்காக மார்க்கத்தை சமரசம் செய்து கொள்ளாதீர்கள். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம்மை அவன் விரும்புவோரின் பட்டியலிலும், அவனின் உண்மையான அடியான்கள் விரும்புவோரின் பட்டியலிலும் நம்மை வைப்பானாக. ஆமீன்.



.
read more "25 வாக்குறுதிகள் - ஒன்பதாம் வாக்குறுதி"

August 31, 2010

சிந்தனைக்கு இன்று...

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் கூறியதாக காணப்படும் அறிவிப்பு:

"இரண்டு பகல்களும் இரண்டு இரவுகளும் உள்ளன, யாராலும் அது போல் அறிந்திருக்க முடியாது. எந்த பகலில்(நாளில்) அல்லாஹ்வினிடத்திலிருந்து அவனின் கருணை கிட்டுமா அல்லது அவனின் தண்டனை கிட்டுமா என காத்துக் கொண்டிருப்பீர்களே அந்த பகல் ஒன்று. எந்த நாளில் உங்கள் (செய்த அமல்களுடைய) புத்தகம் உங்களின் வலது கைக்கு கிட்டுமோ அல்லது இடது கைக்கு கிட்டுமோ என காத்துக் கொண்டிருப்பீரோ அந்த பகல்(நாள்); உங்களைப் புதைத்த கல்லறையில் தனியாக கழிப்பீர்களே அந்த இரவு மற்றும் கயாமத் நாள் அடுத்த பகலி என்று தெரிந்த பின் அதற்காக காத்து காத்து கழியுமே அந்த இரவு...அதன் பின் இரவுகளே இல்லாமல் போகுமே அந்த கடைசி இரவு."

அபூ பக்ர் அத் தய்னூரி, அல் முஜாலசா வ ஜவாஹிர் அல் இல்ம் இதழ், கட்டுரை எண் 19.



.
read more "சிந்தனைக்கு இன்று..."

August 30, 2010

25 வாக்குறுதிகள் - ஆறாம் வாக்குறுதி

அல்லாஹ்வின் அளவிட இயலா கருணை 'அர் ரஹ்மா'

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில்

"ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ, அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும்."(திருமறை 45:30)
என்று கூறுகின்றான்.

விளக்கவுரை:
அல்லாஹ்தான் அர்-‍ரஹீம்(மிக்க கருணையுடையவன்). ஒரு சராசரி மனிதனை நாம் ரஹீம் அல்லது கருணை மிக்கவன் என்றும் கூறலாம். ஆனால், அல்லாஹ்வின் கருணையும் அதன் தரமும் அலாதியானது. அல்லாஹ்வின் மேன்மைக்கேற்றவாறே அல்லாஹ்வின் கருணையும். அல்லாஹ்வின்,"இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்...", எனும்  கூற்றான‌து, முஃமின்களை கருணையின் உச்சத்திற்கு கொண்டு செல்வதை குறிப்பிடுகின்றது. இதே போல் ஒரு ஹதீத்தில் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதையும் கவனிக்கலாம், "அல்லாஹ்வின் கருணையன்றி யாரும் சுவனத்தில் நுழைய முடியாது."

என்னுரை:
ஆலிம்களின் கருத்தின்படி அல்லாஹ்வின் இரு வேறு பெயர்களான அர்‍-ரஹ்மானுக்கும், அர்-‍ரஹீமிற்கும் சில வேறுபாடுகள் உள்ளன. இரண்டும் கருணையையே குறிப்பிடுவன என்றாலும், அர்-ரஹ்மான் எனும்பொழுது அகில உலகத்திற்கும் கருணை செலுத்துகின்ற இறைவன் என்று பொருள். அஃதாவது, அல்லாஹ்வை நம்பியவர்களுக்கும் சரி, நம்பாதவர்களுக்கும் சரி ஒன்று போல அனைவருக்கும் கருணையை பொழிபவன். ஆண், பெண், முஸ்லிம், முஸ்லிமல்லாதவர், பிராணிகள் என சகல ஜீவராசிகளுக்கும் கருணை புரிவதே அர்-ரஹ்மானின் பொருளாகும். ஆனால் அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா இந்த வசனத்தில் உபயோகிப்பது அர்-‍ரஹீம் என்னும் பெயரை. இதன் பொருள் என்னவெனில், தனிப்பெருங்கருணையாகும். அஃதாவது அல்லாஹ்வின் இன்னொரு சிறப்பு மிக்க கருணை, முஃமின்க‌ளுக்கு மட்டும். ஆகிரத்தில் இந்த கருணை வெளிப்படும் இன்ஷா அல்லாஹ். இந்த கருணையே நம் அனைவரையும், கடலளவு, கடலின் நுரையளவு பாவமிருந்தாலும் அல்லாஹ்வினிடத்தில் பாவமன்னிப்பும் சுவனத்தையும் பெற்று தரும். இந்த தனிப்பெருங்கருணையே அர் ரஹீமின் வடிவமாகும். அல்லாஹ் இந்த கருணையையே மகத்தான, தெளிவான வெற்றி என்கிறான். இந்த தனிப்பெருங்கருணை கிட்ட நாம் செய்ய வேண்டியதெல்லாம் பலமான ஈமான் கொள்வதும், அதன் மேல் அமல் செய்வதும்தான். செய்வோமா?
read more "25 வாக்குறுதிகள் - ஆறாம் வாக்குறுதி"

August 29, 2010

25 வாக்குறுதிகள் - மூன்றாம் வாக்குறுதி

அல்லாஹ்வின் அருகாமை

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"...மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான்..." (திருமறை 8:19)

விளக்கவுரை:
எப்பொழுது எல்லாம் வல்ல இறைவன்,"அல்லாஹ் முஃமின்களோடு இருக்கின்றான்" என்று கூறிவிட்டானோ அதன்பின் முஃமின்களுக்கு வேறு யாருடைய தயவும் தேவை இல்லை. ரசூலுல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்,"அல்லாஹ்வைப் பற்றிய எண்ணத்துடன் எப்பொழுதும் இருங்கள், அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான். அல்லாஹ்வை சதா நேரமும் நினைத்துக் கொண்டே இருங்கள், உங்களுக்கு முன் அவனிருக்க காண்பீர்கள்". அல்லாஹ் நம் அருகாமையில் இருந்து நமக்கு தேவையானவற்றை நம் அமல்களுக்கு ஏற்ப தந்தருள்வான்.

என்னுரை:
அல்லாஹ் நம்முடன் இருப்பது என்பதை பௌதீக முறையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதன் பொருள் அல்லாஹ்வின் உதவியும், அவனின் உதவியும், அவனின் பாவமன்னிப்பும், அவனின் ரஹ்மத்தும், அவனளிக்கும் ஹிதாயத்தும் நம்மருகிலேயே உள்ளன என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் இத்தகைய அருகாமை எப்பொழுது கிட்டும், நாம் உண்மையான் முஃமின்களாக, இன்னும் இன்னும் ஈமானை மெருகுபடுத்திக் கொள்பவர்களாக இருக்கும்போது மட்டுமே. அல்லாஹ்வின் அருகாமை எல்லா முஸ்லிகளுக்கும் உண்டுதானே என்று ஹராமான முறையில் வாழ்க்கையை நடத்துவதோ, தொழுகை, சதகா, ஜகாத், நோன்பு என்று மற்ற விஷயங்களை விட்டுவிடுவதாலோ எந்த ஒரு பயனும் இல்லை. ஏனெனில் ஈமான் என்பதும் அதன் மேலான அமல் என்பதும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது. ஈமானில்லாத அமலாலோ அல்லது அமலில்லாத ஈமானாலோ பிரயோஜனமில்லை. அல்லஆஹ்வின் உதவி வேண்டுவோரே, உங்கள் ஈமானை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன் மேல சிறந்த அமல்களை செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் வாக்குறுதி உங்களை மறுமையில் வெற்றி பெறச் செய்யும்.



.
read more "25 வாக்குறுதிகள் - மூன்றாம் வாக்குறுதி"

August 27, 2010

இன்றைய மேற்கோள்

உத்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி) அவர்கள் ஓர் பயான் / குத்பாவில் கூறியது:

"ஆதமின் மக்களே! நினைவில் வையுங்கள், நீங்கள் இந்த உலகில் வந்ததிலிருந்து உங்களுக்கென பணிக்கப்பட்ட, மரண தருவாயில் உங்கள் ரூஹை எடுக்கும் மலக்குமார் இன்னும் உங்களை தாண்டி வேறு ஆன்மாவை நாடி செல்லவில்லை. மற்றுமோர் ஆன்மாவின் ரூஹை எடுக்கப் போகும்போது அனிச்சையாய் உங்களை நோக்கி வரக்கூடும். அந்த மலக்குமாருக்காக காத்திருங்கள், மற்றும் தயாராக‌ இருங்கள் (உங்களின் அமல்களை சரி செய்து கொண்டு) . மேலும் அந்த மலக்குமாரைப் பற்றி நிமிடமேனும் மறந்துவிடாதீர்கள், ஏனெனில் அவர் உங்களை எக்காலத்திலும் மறக்கப் போவதில்லை. மேலும் ஆதமின் மக்களே...இதையும் நினைவில் வையுங்கள், சுயசிந்தனை இல்லாமல், மறுமைக்கான தயாரிப்பும் இல்லாமல் நீங்கள் இருப்பின் வேறு யாரும் உங்களுக்கென மறுமைக்கு தயாராக இயலாது. நீங்கள் அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலாவை சந்தித்தே தீர வேண்டும், வேறு யாரும் உங்களுக்கென அதற்கு தயாராக மாட்டார். சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக."

அபூ பக்ர் அத் தய்னூரி, அல் முஜாஸிலாஹ் வல் ஜவாஹிர் அல் இல்ம் இதழ் 2: பக்கம் 73, 74.



.
read more "இன்றைய மேற்கோள்"

August 25, 2010

சிந்தனைக்கு இன்று

அபூ பக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள்," இந்த உலகின் இருள்களும் அவற்றிலிருந்து வெளி வர உதவும் விளக்கொளிகளும் ஐந்து வகையாகும். அவையாவன:
இந்த உலகின் மீதான ஆசை ஓர் இருளாகும், அதன் விளக்கு அல்லாஹ்வின் மேலான தக்வாவாகும்;
பாவங்கள் அனைத்தும் இருள்களாகும், அதன் விளக்கு தவ்பாவாகும்;
கல்லறை ஓர் இருளடைந்த இடமாகும், அதன் விளக்கு 'லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' ஆகும்;
மறுமை ஓர் இருளாகும், அதன் விளக்கு நல் அமல்களாகும்;
மேலும் ஸிராத்துல் முஸ்தகீம் எனும் பாலம் ஓர் இருளாகும், மற்றும் அதன் விளக்கு அல்லாஹ்வின் மீதான அசையா நம்பிக்கையாகும்;"

இப்னு ஹாஜர் அல் அஸ்கலானி(ரஹி)யுடைய 'தீர்ப்பு நாளுக்கு தயாராகுங்கள்' என்னும் புத்தகத்திலிருந்து.



.
read more "சிந்தனைக்கு இன்று"

இன்றைய திருக்குர்'ஆன் வசனம்

"...நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்." (அல் இஸ்றா:45)



.
read more "இன்றைய திருக்குர்'ஆன் வசனம்"