பக்கங்கள்

Showing posts with label முஹம்மது நபி. Show all posts
Showing posts with label முஹம்மது நபி. Show all posts

September 3, 2010

இன்றைய ஹதீத்

“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமலானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: புகாரி, முஸ்லிம்



.
read more "இன்றைய ஹதீத்"

September 1, 2010

சிந்தனைக்கு இன்று...

"(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள்.

நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம்.

நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன்.

அறிவிப்பவர் : அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி)
ஆதாரம் : புகாரி
read more "சிந்தனைக்கு இன்று..."

August 30, 2010

சிந்தனைக்கு இன்று...

‘நோன்பாளி தேவையற்ற பேச்சுக்கள், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள் என்பவற்றைத் தவிர்ந்திருக்க வேண்டும். எத்தனையோ நோன்பாளிகளுக்கு அவர்களது நோன்பால் பசித்திருந்ததைத் தவிர எந்தப் பயனும் இருக்காது. எத்தனையோ தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை மூலம் கண் விழித்திருந்ததைத் தவிர வேறு பலன் கிடைக்காது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : இப்னுமாஜா, அஹ்மத்.
read more "சிந்தனைக்கு இன்று..."

August 29, 2010

இஸ்லாத்தின் உண்மையான‌ உத்வேகமூட்டும் வாழ்க்கைகள்

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹமான் நிர் றஹீம்

அன்பான சகோதர சகோதரிகளே..,

அல்ஹம்துலில்லாஹ். இந்த வலைப்பூவை நான் தாமத்தித்தே ஆரம்பித்தேன் எனினும், என்னையுமறியாமல், இந்த வலைப்பூவை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டினேன். அல்லாஹு சுப்ஹானவத ஆலாவின் உதவியும் கிட்டியதால், இதோ இன்னுமொரு தொகுப்பு நமக்கு படிக்க கிடைத்துள்ளது. இந்த தொகுப்பானது, நம் இஸ்லாத்திலும், நடைமுறையிலும், வாழ்க்கைநெறிகளிலும் நமக்கு முன்னோர்களான, நபிகளாரின்(ஸல்) சீரிய தோழர்களின் வாழ்க்கைப் பதிவே இத் தொடராகும். இத் தொடரை எழுதி, அதை இலவசமாய் பிரசுரித்து மற்ற வலைதளங்களிலும் பிரசுரிக்க அனுமதித்த 'சத்தியமார்க்கம்' தளத்திற்கு என் நன்றி. அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா, இரு உலகின் நன்மைகளையும் 'சத்தியமார்க்கம்' தளத்தின் நிர்வாகிகளுக்கும், ஆதரிப்போருக்கும், உதவுபவர்க‌ளுக்கும் தந்தருள்வானாக. ஆமீன்.

இந்த வாழ்க்கை வரலாறுகள், நம் வாழ்வை வளப்படுத்தக்கூடிய காரணிகள். நம் ஈமானை செம்மை படுத்தக்கூடிய ஆபரணங்கள். நிச்சயமாக, இவர்களின் வாழ்வைப்பற்றி அறிந்து கொள்ளாதவரை, நம்மால் நம் ஈமானை வளர்க்க இயலாது. ஆகவே, நேரம் கிட்டும்போதெல்லாம் மறக்காமல் இவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இவர்களைப் போலவே வாழ து'ஆ செய்யுங்கள். முடிந்தவரை முயலுங்கள். அல்லாஹ் நம் ஈமானை பரிசுத்தப்படுத்திட உதவிடுவானாக. ஆமீன். இனி இந்த தொடரைப் படிப்போம்...வாருங்கள்
read more "இஸ்லாத்தின் உண்மையான‌ உத்வேகமூட்டும் வாழ்க்கைகள்"

August 25, 2010

இன்றைய ஹதீத்

“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்." (புகாரி, அபூதாவூத், திர்மிதி)



.
read more "இன்றைய ஹதீத்"