பக்கங்கள்

Showing posts with label பாவங்கள். Show all posts
Showing posts with label பாவங்கள். Show all posts

September 1, 2010

சிந்தனைக்கு இன்று...

"(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள்.

நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம்.

நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன்.

அறிவிப்பவர் : அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி)
ஆதாரம் : புகாரி
read more "சிந்தனைக்கு இன்று..."

August 30, 2010

இன்றைய ஹதீத்

"ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும் - பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் (அத்தியாயம்: 2, பாடம்: 2.05, எண் 344)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
read more "இன்றைய ஹதீத்"

August 29, 2010

இன்றைய மேற்கோள்

வாழ்வின் திசை பற்றி...

அல் ஹஸன் அல் பஸ்ரி(ரஹி) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது அவரின் சில தோழர்கள் வந்து அவரிடம், "அபூ சயீதே, எங்களுக்கு உபயோகமளிக்கக்கூடிய வார்த்தைகள் சில கூறு", என்று கோரினர். அதற்கு வந்த பதில்,

"மூன்று வாக்கியங்களைக் கொண்டு உங்களை நான் ஆயத்தப்படுத்துவேன். அதன்பின் நான் எந்த நிலையில் இருக்கின்றேனோ அதே நிலையில் என்னை விட்டுவிடவும்.
ஒன்று, உங்களுக்கு தடுக்கப்பட்ட பொருட்களிலிருந்து தூரமான மக்களை விடவும் நீங்கள் தூரமாயிருங்கள்;
இரண்டு, உங்களுக்கு ஹலாலாக்கப்பட்ட நல் அமல்களில் மற்றெல்லோரையும் விட அதிகமாக நீங்கள் பங்கு வகியுங்கள்;
மூன்று, நினைவில் வையுங்கள், உங்களின் வாழ்வில் எல்லா நேரத்திலும் இரண்டு காலடி மட்டுமே நீங்கள் வைக்க இயலும், ஒரு அடி உங்கள் சார்பாகவும், மற்றொரு அடி உங்களுக்கெதிரானதாகவும், எனவே எங்கிருந்து வருகிறீர்கள், எங்கே போகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்"

அபூ ந'யாம் ஹியாஹ் அல் அவ்லியாஹ் 2:154



.
read more "இன்றைய மேற்கோள்"

August 26, 2010

இன்றைய மேற்கோள்

இமாம் அல் புவய்தி(ரஹி) அவர்கள் கூறியது:

இமாம் ஷாஃபிஈ(ரஹி) அவர்கள் கூற நான் கேட்டதாவது," ஒரு மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் முழுமையடைய நான்கு குணங்களை பெற்றிருக்க வேண்டும். அவை யாவெனில், (அத்-தியானாஹ்) மார்க்க அடிப்படையின்படி வாழ்வது, (அல்-அமானாஹ்) பிறர் அவன் மேல் ஸ்திரமான நம்பகத்தன்மை கொண்டிருத்தல், (அல்-ஸியானாஹ்) (பாவங்களிலிருந்து தம்மை) தற்காத்துக்கொள்ளல், மற்றும் (அர்-ரஜானாஹ்) மதுவிலிருந்து முற்றிலும் விலகியிருத்தல்"

அல் பைஹகி மனாகிப் அஷ் ஷாஃபிஈ 2:189



.
read more "இன்றைய மேற்கோள்"