பக்கங்கள்

Showing posts with label ஹதீத். Show all posts
Showing posts with label ஹதீத். Show all posts

September 3, 2010

இன்றைய மேற்கோள்

அப்துல்லாஹ் பி. ஷகீக் அல் உகய்ல் (ரஹி) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்(ரலி), வேறெந்த செயலையும் 'குஃப்ரு'க்கு(இறைமறுப்பு) நிகராக கருதவில்லை, தொழுகையை விட்டுவிடுவதை தவிர".

அத்‍-திர்மிதி, அல்-சுனன் ஹதீத் 2622, அல் அல்பானி அவர்களின் சுனன் அத்-திர்மிதி எனும் புத்தகத்தில் ஸஹீஹ் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
read more "இன்றைய மேற்கோள்"

இன்றைய ஹதீத்

“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமலானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: புகாரி, முஸ்லிம்



.
read more "இன்றைய ஹதீத்"

September 1, 2010

சிந்தனைக்கு இன்று...

"(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள்.

நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம்.

நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன்.

அறிவிப்பவர் : அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி)
ஆதாரம் : புகாரி
read more "சிந்தனைக்கு இன்று..."

இன்றைய ஹதீத்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
read more "இன்றைய ஹதீத்"

August 31, 2010

இன்றைய ஹதீத்

நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் ‘பிரார்த்தனை (து'ஆ) அது தான் வணக்கமாகும்‘ எனக் கூறிவிட்டு பின் வரும் வசனத்தை ஓதினார்கள்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)(து'ஆ)களுக்குப் பதிலளிக்கிறேன், எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (ஆதாரம்: திர்மிதி).
read more "இன்றைய ஹதீத்"

இன்றைய து'ஆ

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு,

"யா அல்லாஹ்! நீயே பாவங்களை மன்னிக்கக்கூடியவன். பெருந்தன்மையுடையவன். மன்னிப்பதை விரும்புபவன். (ஆகவே) என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!! "
 என்று கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

read more "இன்றைய து'ஆ"

August 30, 2010

சிந்தனைக்கு இன்று...

‘நோன்பாளி தேவையற்ற பேச்சுக்கள், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள் என்பவற்றைத் தவிர்ந்திருக்க வேண்டும். எத்தனையோ நோன்பாளிகளுக்கு அவர்களது நோன்பால் பசித்திருந்ததைத் தவிர எந்தப் பயனும் இருக்காது. எத்தனையோ தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை மூலம் கண் விழித்திருந்ததைத் தவிர வேறு பலன் கிடைக்காது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : இப்னுமாஜா, அஹ்மத்.
read more "சிந்தனைக்கு இன்று..."

இன்றைய ஹதீத்

"ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும் - பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் (அத்தியாயம்: 2, பாடம்: 2.05, எண் 344)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
read more "இன்றைய ஹதீத்"

இன்றைய து'ஆ

ஆயிஷா(ரலி) அவர்கள் இந்த து'ஆவை நபி(ஸல்) அவர்களிடத்திலிருந்து அறிவிக்கிறார்கள்,


"யா அல்லாஹ் என்னுடைய நஃப்ஸிற்கு பக்தியையும் தூய்மையையும் கொடு. நீதான் அதனை தூய்மையாக்க வல்லவன், நீதான் அதன் பாதுவாலனும், எஜமானும் ஆவாய்."


.
read more "இன்றைய து'ஆ"

August 29, 2010

இன்றைய து'ஆ


"யா அல்லாஹ், (கியாமத் நாளில்) என்னுடைய கேள்வி கணக்கை எளிதாக்குவாயாக."
(ஆதாரம்: மஸ்ததர் ஹாகிம்; இமாம் அஹ்மது(ரஹி)வும், இமாம் ஹாகிம்(ரஹி)உம் இதனை 'ஸஹீஹ்' என்று அங்கீகரித்துள்ளார்கள். இமாம் அத் தஹாபியும்(ரஹி) அதை ஆமோதித்துள்ளார்.)



.
read more "இன்றைய து'ஆ"

August 27, 2010

இன்றைய ஹதீத்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது ஏறினார்கள். ஆமீன் ஆமீன் ஆமீன் என்று கூறினார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, "ஜிப்ரீல் (அலை) அவர்கள், எந்தவொரு அடியான் ரமலானை அடைந்தும் அவனது பாவம் மன்னிக்கப்படவில்லையோ அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும்* என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்றுக் கூறினேன். பிறகு எந்த அடியானிடத்தில் என்னைப் பற்றி சொல்லப்படும் போது அவன் என் மீது ஸலாம் கூறவில்லையோ அவனுடைய மூக்கு மண்ணை கவ்வட்டும்** என்று கூறினார்கள் அதற்கு ஆமீன் என்று கூறினேன். எந்த அடியான் தனது தாய் தந்தையையோ அல்லது இருவரில் ஒருவரையோ பெற்றிருந்தும் சொர்க்கம் செல்லவில்லையோ அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்*** என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்று கூறினேன்" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ர­)
நூல் : பைஹகீ (8767)

* ரமதான் மாதத்தையும் பிற மாதத்தைப் போல எண்ணி அதில் அதிகதிகமாக நற்செயல்கள் செய்யாமலும், அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடும் இபாதத்துகளை செய்யாமலே காலம் கடத்தியவனும் ஆவான்.

**ந‌பிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரை சொல்லும்பொழுதெல்லாம் மற்றும் கேட்கும் பொழுதெல்லாம், ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் என்று கூறவேண்டியது கடமை. அதை தவற விட்டவன் / அலட்சியம் செய்தவன்.

*** தன்னுடைய தாய் தந்தை வயோதிகர்கள் ஆன பின்னரும் அவர்களை தகுந்த முறையில் கவனிக்காமல், பாதுகாக்காமல், சொல் கேளாமல், மதிக்காமல் விட்டவன்
.



.
read more "இன்றைய ஹதீத்"

August 25, 2010

இன்றைய ஹதீத்

"தொழுகையின் அழைப்பிலும், முதல் வரிசையிலும் (கிடைக்கும் சிறப்புகளை) மனிதர்கள் அறிந்து கொள்வார்களேயானால் அதன்பிறகு அதற்காக சீட்டுப் போடுவதை தவிர வேறு வழியைக் காணமாட்டார்கள், (ஆகவே) அதற்காக சீட்டுப்போடுவார்கள். முன்னால் முந்திய நேரத்தில் வருவதன் (பலனை) மக்கள் அறிந்தால் அதன்பால் முந்திவிடுவார்கள். இஷாத் தொழுகையிலும் ஸுபுஹுத் தொழுகையிலும் (கிடைக்கும் நன்மைகளை) அவர்கள் அறிவார்களேயானால், அவ்விரு தொழுகை(யை நிறைவேற்றுவதற்)க்காக நடக்க இயலாதவர்கள் அவர்களது கைகள், கால்களில், அல்லது பின்பாகத்தில் நகர்ந்தவர்களாக வருவர்" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு 
 ஆதார‌ம்: ஸஹீஹ் புகாரி | தொழுகை பற்றிய நூல் | ஹதீஸ் எண் : 269



.
read more "இன்றைய ஹதீத்"

இன்றைய ஹதீத்

“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்." (புகாரி, அபூதாவூத், திர்மிதி)



.
read more "இன்றைய ஹதீத்"

August 24, 2010

இன்றைய ஹதீத்

‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முத்தபகுன் அலைஹி)



.
read more "இன்றைய ஹதீத்"