பக்கங்கள்

August 29, 2010

25 வாக்குறுதிகள் - இரண்டாம் வாக்குறுதி

ஒளி ‍- அன் நூர்

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) “இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்). (திருமறை 57:12)

விளக்கவுரை:
கியாமத் நாளன்று முழுதும் இருட்டானதாக இருக்கும். அந்த இருளில் நம்மனைவரையும்(முஃமின்கள்) ஓர் பாலத்தை கடக்க சொல்வார்கள். அந்த பாலமானது ஓர் தலைமுடியை விட மெலிதானதாகவும், கத்தியை விட கூர்மையானதாகவும் இருக்கும். அதன் மேல் ஒளியும் இருக்காது, எனவே அல்லாஹ் தரும் ஒளியை தவிர வேறெதுவும் கொண்டு நம்மால் அந்த பாலத்தை கடக்க முடியாது. அல்லாஹ் அவ்வேளையில் நம்மில் ஒவ்வொருவருக்கும் தரும் ஒளியானது இவ்வுலகில் நாம் எவ்வளவு ஒளியை நம் இதயத்தில் சுமந்தோமோ (ஈமான் மற்றும் அதன் மேலான அமல் என்னும் ஒளி) அந்த ஒளிக்கே ஈடாக இருக்கும். இவ்வுலகில் தெய்வீக ஒளியாக நம் மனதில் இருக்கில் ஈமான் அன்று இயல்பான, உண்மையான ஒளியாக நம் கண் முன் வரும்.

நம்முடைய ஈமானைப் பொறுத்தே அந்த ஒளியானது மிகுந்தும் குறைந்தும் காணப்படும். சிலருக்கு அவ்வொளி எவ்வளவு பிரகாசமாக இருக்கும் எனில், அவர்கள் நிமிடத்தில் ஓடியே அந்த பாலத்தை கடந்து விடுவர். சிலர் நடந்து போகக் கூடிய அளவே ஒளி தரப்படுவர். சிலரின் ஒளியோ இடைவெளிகளில் மின்னிட்டுக் கொண்டிருக்கும். அவ்வாறானவர்கள் ஒவ்வொரு முறையும் நின்று, மீண்டும் நல்ல வெளிச்சம் கிட்டிய பிறகே போக இயலும். மேலும் சிலரோ...பாலத்தை கடக்கும் முன்னரே அவ்வொளி மறைந்து போகும். அவர்களால் கடக்க இயலாது.


என்னுரை:
எனவே இந்த விளக்கவுரை படித்தபின் நம்மில் தோன்றும் பயம் என்ன? யா அல்லாஹ், எனக்கும் என் தாய் தந்தையர்க்கும் மற்றும் சகல குடும்பத்தினர்க்கும் விலகாத பிரகாசமான ஒளி தருவாயாக என்னும் து'ஆதான். ஆனால் வெறும் து'ஆவில் காரியம் நடந்துவிடுமா? அல்லாஹ் தெளிவாக தன் திருமறையில், அந்த ஒளி பெற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் கூறி விட்டான். திண்ணமாக, பலமான ஈமானும், அதன் மேலான நல் அமல்களும் இல்லாமல் நம்மால் அந்த ஒளியை பெற இயலாது. அல்லாஹ் மனமிரங்கினால் ஒழிய நமக்கு அது கிட்டது. எனவே இன்னும் மீதமிருக்கும் நம் வாழ்நாட்களில் இன்ஷா அல்லாஹ் நம்முடைய மனதில் இருக்கும் ஈமான் என்னும் ஒளியை சுடர் விடச் செய்வோமாக. இந்த ரமதானின் கடைசி பத்து நாட்களிலும் இன்ஷா அல்லாஹ் எவ்வளவு தவ்பா செய்ய இயலுமோ அத்தனை தவ்பா செய்து மீண்டும் அந்த பாவங்கள் செய்யாமல் நம் ஈமானை காப்போமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலா நம்மின் இந்த நாட்டத்தை அங்கீகரித்து நம்மை மறுமையில் ஒளி நிறைந்தவர்களாக ஆக்குவானாக. ஆமீன். ஆமீன். அல்லாஹும்ம ஆமீன்..

No comments:

Post a Comment