பக்கங்கள்

August 29, 2010

25 வாக்குறுதிகள் - மூன்றாம் வாக்குறுதி

அல்லாஹ்வின் அருகாமை

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"...மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான்..." (திருமறை 8:19)

விளக்கவுரை:
எப்பொழுது எல்லாம் வல்ல இறைவன்,"அல்லாஹ் முஃமின்களோடு இருக்கின்றான்" என்று கூறிவிட்டானோ அதன்பின் முஃமின்களுக்கு வேறு யாருடைய தயவும் தேவை இல்லை. ரசூலுல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்,"அல்லாஹ்வைப் பற்றிய எண்ணத்துடன் எப்பொழுதும் இருங்கள், அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான். அல்லாஹ்வை சதா நேரமும் நினைத்துக் கொண்டே இருங்கள், உங்களுக்கு முன் அவனிருக்க காண்பீர்கள்". அல்லாஹ் நம் அருகாமையில் இருந்து நமக்கு தேவையானவற்றை நம் அமல்களுக்கு ஏற்ப தந்தருள்வான்.

என்னுரை:
அல்லாஹ் நம்முடன் இருப்பது என்பதை பௌதீக முறையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதன் பொருள் அல்லாஹ்வின் உதவியும், அவனின் உதவியும், அவனின் பாவமன்னிப்பும், அவனின் ரஹ்மத்தும், அவனளிக்கும் ஹிதாயத்தும் நம்மருகிலேயே உள்ளன என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் இத்தகைய அருகாமை எப்பொழுது கிட்டும், நாம் உண்மையான் முஃமின்களாக, இன்னும் இன்னும் ஈமானை மெருகுபடுத்திக் கொள்பவர்களாக இருக்கும்போது மட்டுமே. அல்லாஹ்வின் அருகாமை எல்லா முஸ்லிகளுக்கும் உண்டுதானே என்று ஹராமான முறையில் வாழ்க்கையை நடத்துவதோ, தொழுகை, சதகா, ஜகாத், நோன்பு என்று மற்ற விஷயங்களை விட்டுவிடுவதாலோ எந்த ஒரு பயனும் இல்லை. ஏனெனில் ஈமான் என்பதும் அதன் மேலான அமல் என்பதும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது. ஈமானில்லாத அமலாலோ அல்லது அமலில்லாத ஈமானாலோ பிரயோஜனமில்லை. அல்லஆஹ்வின் உதவி வேண்டுவோரே, உங்கள் ஈமானை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன் மேல சிறந்த அமல்களை செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் வாக்குறுதி உங்களை மறுமையில் வெற்றி பெறச் செய்யும்..

No comments:

Post a Comment