பக்கங்கள்

August 29, 2010

25 வாக்குறுதிகள் - நான்காம் வாக்குறுதி

ஃபத்ல் - அல்லாஹ்வின் அருளும், கருணையும்

அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலா தன் திருமறையில்,

"...அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்." (திருமறை 3:152)

விளக்கவுரை:
அல்லாஹ்வின் அருளானது மிக மிக விசாலமானது. நம்முடைய தகுதியையும் தாண்டி அல்லாஹ்வின் அருளானது மிஞ்சி நிற்கும் ஒன்று. சில சமயங்களில் அல்லாஹ்விடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அது அதிகமாக கிடைக்கின்றது. இஃதே முஃமின்களின் மேல் அல்லாஹ்வின் கருணையும், அருளுமாகும்.

என்னுரை:
அல்லாஹ்வின் அருள் கிட்ட நாம் மந்திரம் செய்ய வேண்டியதில்லை. அது மந்திரம் போன்றே நடக்கும் என நம்பி கிடக்க வேண்டியதில்லை. அல்லாஹ்வின் அருளானது, உங்களுக்கு ஒரு கவலை நேரும்போதும் உண்டு, மேலும் உங்களுக்கு ஓர் கஷ்டமோ அல்லது ஊனமோ ஏற்படும்போதும் உண்டு. ஏனெனில் முஃமின்களுக்கு நல்லதை நாடும்பொழுது, பெருங்கேட்டிலிருந்து தவிர்த்து சிறிய காயம் மூலம் ஓர் வாட்டம் தந்து அதன் மூலம் நரக நெருப்பினை தடுப்பவன் அல்லாஹ். நாம் எண்ணிட இயலாத வழிகளில் நமக்கு நல்லதை நாடுபவன் அவன் மட்டுமே. அல்லாஹ்வினிடத்தில் ததும்பி நிற்கும் இந்த அருளையும் கருணையையும் பெற நாம் செய்ய வேண்டியது என்ன? முனாஃபீக்குத்தனம் இல்லாத தூய்மையான ஈமான் கொள்வதே ஆகும். ஆதமின்(அலைஹ்) மக்களான நாம் தவறு செய்பவர்களே...ஆனால் தவ்பா செய்து அல்லாஹ்வின் அருகாமையை இறைஞ்சுவதன் மூலம் இன்னமும் ஈமான் பலப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ், எல்லாம் வல்ல இறைவனின் அருளும் கருணையும் நம் வாழ்வில் நிரம்பிட மாசற்ற ஈமானை நம் மனதில் விதைப்போமாக.



.

No comments:

Post a Comment