பக்கங்கள்

Showing posts with label நல் அமல். Show all posts
Showing posts with label நல் அமல். Show all posts

August 29, 2010

25 வாக்குறுதிகள் - நான்காம் வாக்குறுதி

ஃபத்ல் - அல்லாஹ்வின் அருளும், கருணையும்

அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலா தன் திருமறையில்,

"...அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்." (திருமறை 3:152)

விளக்கவுரை:
அல்லாஹ்வின் அருளானது மிக மிக விசாலமானது. நம்முடைய தகுதியையும் தாண்டி அல்லாஹ்வின் அருளானது மிஞ்சி நிற்கும் ஒன்று. சில சமயங்களில் அல்லாஹ்விடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அது அதிகமாக கிடைக்கின்றது. இஃதே முஃமின்களின் மேல் அல்லாஹ்வின் கருணையும், அருளுமாகும்.

என்னுரை:
அல்லாஹ்வின் அருள் கிட்ட நாம் மந்திரம் செய்ய வேண்டியதில்லை. அது மந்திரம் போன்றே நடக்கும் என நம்பி கிடக்க வேண்டியதில்லை. அல்லாஹ்வின் அருளானது, உங்களுக்கு ஒரு கவலை நேரும்போதும் உண்டு, மேலும் உங்களுக்கு ஓர் கஷ்டமோ அல்லது ஊனமோ ஏற்படும்போதும் உண்டு. ஏனெனில் முஃமின்களுக்கு நல்லதை நாடும்பொழுது, பெருங்கேட்டிலிருந்து தவிர்த்து சிறிய காயம் மூலம் ஓர் வாட்டம் தந்து அதன் மூலம் நரக நெருப்பினை தடுப்பவன் அல்லாஹ். நாம் எண்ணிட இயலாத வழிகளில் நமக்கு நல்லதை நாடுபவன் அவன் மட்டுமே. அல்லாஹ்வினிடத்தில் ததும்பி நிற்கும் இந்த அருளையும் கருணையையும் பெற நாம் செய்ய வேண்டியது என்ன? முனாஃபீக்குத்தனம் இல்லாத தூய்மையான ஈமான் கொள்வதே ஆகும். ஆதமின்(அலைஹ்) மக்களான நாம் தவறு செய்பவர்களே...ஆனால் தவ்பா செய்து அல்லாஹ்வின் அருகாமையை இறைஞ்சுவதன் மூலம் இன்னமும் ஈமான் பலப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ், எல்லாம் வல்ல இறைவனின் அருளும் கருணையும் நம் வாழ்வில் நிரம்பிட மாசற்ற ஈமானை நம் மனதில் விதைப்போமாக.



.
read more "25 வாக்குறுதிகள் - நான்காம் வாக்குறுதி"

இன்றைய மேற்கோள்

யஹ்யா பின் மு'ஆத்(ரஹி) அவர்கள் கூறியதாவது, "ஒர் இதயத்துக்கு நிவாரண மருந்து எதுவெனில், திருக்குர்'ஆனை ஓதுவதும், அதன் பொருளின் மேல் சீரிய சிந்தனை செய்வதும், நிரம்பாத ஓர் வயிற்றை கொள்வதும், (கியாம் அல் லைல் அல்லது தஹஜ்ஜுத்) இரவில் தனித்து வெகு நேரம் தொழுவதும், சுஹூரின் நேரத்தில் அல்லாஹ்வை மட்டுமே நினைவில் கொள்வதும் மேலும் நல் அமல்கள் செய்யும் ஆன்மாக்களுடன் சினேகிதம் கொள்வதும் ஆகும்."



.
read more "இன்றைய மேற்கோள்"

August 27, 2010

25 வாக்குறுதிகள் - முதல் வாக்குறுதி


சுவர்க்கம் - ஜன்னாஹ்

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்,

நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (திருமறை 2:25)


இமாம் தரும் விளக்கவுரை:
அல்லாஹ் தரும் இந்த ஒரு வாக்குறுதியே முஃமின்களுக்கு போதுமானது. மீதம் உள்ள 24 வாக்குறுதிகளைப் பற்றி எண்ணக் கூட அவகாசம் தராத அளவிற்கு இந்த வாக்குறுதி போதுமானது. ஏனெனில், இந்த வாக்குறுதி சுவர்க்கத்தைப் பற்றியதாகும். சுவர்க்கமும் அதன் பாக்கியங்களும் நம்முடைய தகுதிக்கு மித மிஞ்சினதாகும். இதை யாரும் மறுக்க இயலாது.

என்னுரை:
சுவர்க்கம் எளிதில் கிடைத்துவிடக் கூடிய ஒன்றல்ல. மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டிய ஒன்றாகும். அல்லாஹ்விடமிருந்து இந்த நற்கூலியைப் பெற நாம் கடினமாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பானது, ஈமானை ஒத்ததாகவும், ஷரீ'அத்திற்கு உடன்பட்டதாகவும், ஹலாலான முறையிலும் இருத்தல் வேண்டும். அமல்களில் சிறந்தவை பற்றியும் அதை இன்னும் சிறப்பாக செய்யவும் ஏராளமான ஹதீத்துக்களும் சஹாபாக்களின் வாழ்க்கைமுறையுமே நமக்கு கற்று தரும். எனவே அவ்வித புத்தகங்களை தேடி படித்து நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வோமாக, இன்ஷா அல்லாஹ்.



.
read more "25 வாக்குறுதிகள் - முதல் வாக்குறுதி"

August 26, 2010

இன்றைய மேற்கோள்

காப் அல் அஹ்பார்(ரஹி) கூறினார்கள்,"அல்லாஹ் மாதங்களில் சிறந்ததாக ரமதான் மாதத்தை தேர்ந்தெடுத்தான், பூமியின் அனைத்து இடங்களிலுமிருந்து மக்காவை தேர்ந்தெடுத்தான், இரவினெல்லாம் சிறந்ததாக லைலத்துல்  கத்ரினை தேர்ந்தெடுத்தான், நேரங்களில் சிறந்ததை தொழுகைக்கென தேர்ந்தெடுத்தான். எனவே ஒரு அடியான் எப்பொழுதும் இரு சிறந்த அமல்களுக்கு இடையில் உள்ளான், ஒன்று அவன் செய்து முடித்த நல் அமல், இன்னொன்று அவன் செய்வதற்காக காத்திருப்பது."

அபூ நூ'அய்ம், ஹில்யா அல் அவ்லியா பாகம் 2:பக்கம் 458



.
read more "இன்றைய மேற்கோள்"