பக்கங்கள்

Showing posts with label நோன்பு. Show all posts
Showing posts with label நோன்பு. Show all posts

July 26, 2011

இனிய ரமலானே வருக வருக... வருக.. :)))))))

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 
(அல்குர்ஆன் 2:183) 



அன்புள்ள சகோதர சகோதரிகளே... 

இனிய ரமலான் மாதம் அடி மேல் அடி வைத்து நெருங்கிக் கொண்டே இருக்கிறது.... மனமுவந்த விருந்தினரை வரவேற்கும் முகமாய், பாசமும், அன்பும், விருந்தோம்பலும், 365 நாட்கள் காத்திருந்த நேரத்தின் வேதனையை மறைக்கும் முகமாய்... அப்பப்பா... எண்ணிலடங்கா எண்னங்களுடன் வாசலை நோக்கியவாறே...உங்களுடன் நானும். 

இந்த வருட ரமலானில் என்னென்ன செய்து விருந்தினரை மகிழ்விக்கலாம் என முடிவெடுத்து விட்டீர்களா??? என் முடிவுகள் இன்ஷா அல்லாஹ் நாளை... நீங்களும் தயார் செய்து கொண்டு வாருங்கள்... நல்லமல்களை ஒரு சேர முயன்று வெல்வோம்... தீயவற்றை தடுப்பதில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம்... இன்ஷா அல்லாஹ்... 

அல்லாஹும்ம பலக்ன ரமதான்..... ஆமீன்... ஆமீன்... அல்லாஹும்ம ஆமீன்... 

:))
read more "இனிய ரமலானே வருக வருக... வருக.. :)))))))"

August 31, 2010

இன்றைய து'ஆ

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு,

"யா அல்லாஹ்! நீயே பாவங்களை மன்னிக்கக்கூடியவன். பெருந்தன்மையுடையவன். மன்னிப்பதை விரும்புபவன். (ஆகவே) என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!! "
 என்று கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

read more "இன்றைய து'ஆ"

August 30, 2010

சிந்தனைக்கு இன்று...

‘நோன்பாளி தேவையற்ற பேச்சுக்கள், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள் என்பவற்றைத் தவிர்ந்திருக்க வேண்டும். எத்தனையோ நோன்பாளிகளுக்கு அவர்களது நோன்பால் பசித்திருந்ததைத் தவிர எந்தப் பயனும் இருக்காது. எத்தனையோ தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை மூலம் கண் விழித்திருந்ததைத் தவிர வேறு பலன் கிடைக்காது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : இப்னுமாஜா, அஹ்மத்.
read more "சிந்தனைக்கு இன்று..."

August 26, 2010

சிந்தனைக்கு இன்று

சுலைமான் பி மூசா கூரினார்கள்," நீங்கள் நோன்பிருக்கும்போது உங்கள் செவிகளையும் கண்பார்வைகளையும் சேர்த்தே நோன்பிருக்க வையுங்கள், மேலும் உங்கள் நாவானது பொய் கூறுவதிலிருந்து விலகி இருக்கட்டும், உங்கள் வேலையாட்களையும் துன்புறுத்தாதீர்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளையும் நோன்பில்லா நாளையும் ஒன்று போல வைக்காதீர்கள்"

தாரீக் திமிஷ்க் புத்தகம் பாகம் 22, பக்கம் 389



.
read more "சிந்தனைக்கு இன்று"

August 24, 2010

இன்றைய மேற்கோள்

அபூ அல் ஆலியா(ரஹி) கூறினார்கள்,"நோன்பு இருக்கும் ஓர் மனிதன், படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும்போதும் இபாதத்தில்தான் இருக்கின்றான், அவன் புறம் / கோள் / படுதூர் சொல்லாதவரை"

ஆதாரம்: அல் இமாம் அஹ்மது, அஜ் ஜுஹ்து பாகம் 4:பக்கம் 313



.
read more "இன்றைய மேற்கோள்"