பக்கங்கள்

September 2, 2010

25 வாக்குறுதிகள் - ஒன்பதாம் வாக்குறுதி

அவர்களின் (முஃமின்களின்) மேல் நேசத்தை ஏற்படுத்துவான்.

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்."(திருமறை 19:96)

விளக்கவுரை:
திருக்குர்'ஆனிற்கு விளக்கவுரை எழுதும் ஆசிரியர்கள் கூறுவது என்னவெனில் நீங்கள் உங்களின் உள்ளத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்புகையில், அல்லாஹ் முஃமின்களின் இதயத்தை உங்களை நோக்கி திரும்ப வைக்கின்றான்.

இன்னுமொரு பொன்மொழி என்னவெனில், "நீவிர் மக்களை இன்பப்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வை கோபப்பட வைத்தால் அல்லாஹ் உங்கள் மீது கோபம் கொள்வதோடு மட்டுமல்லாமல் உலகமக்களையும் உங்கள் மேல் கோபம் கொள்ள வைப்பான். நீங்கள் அல்லாஹ்வின் மகிழ்ச்சியை பெறவேண்டி உலக மக்களின் வெறுப்பை சம்பாதித்தால் அல்லாஹ் உங்களிடம் அன்பு கொள்வதோடு உலக மக்களையும் உங்களிடம் நேசம் கொள்ளச் செய்வான்."

நம்முடைய தேவை இதுதான், முஃமின்களின் இதயம் நம்மிடம் நேசம் கொள்ளவேண்டும். எனவே அல்லாஹ்வை நேசியுங்கள். அல்லாஹ் அவனின் அடியான்கள் உங்களை நேசிக்க வைப்பான். இந்த நேசமானது அல்லாஹ்விடம் நேர்மையாய் உண்மையாய் இருக்கும் முஃமின்களிடமிருந்து மட்டுமே. முஸ்லிமல்லாதவர்களோ அல்லது நேர்மையற்ற வெறும் பேச்சுக்கென வாழும் முஸ்லிம்களிடமிருந்தோ அல்ல.

என்னுரை:
பாவமன்னிப்பு தேடுவதிலும், அல்லாஹ்வின் அருகாமையை தேடுவதிலும் மிக முக்கியமான ஒரு படி எதுவெனில் அவனை நேர்மையுடன், ஒழுங்குடன், மனத்தூய்மையுடன் துதிக்கும் முஃமின்களின் நேசத்தை பெறுவது. அவர்களின் கூட்டங்களில் பங்கு கொள்வதே நமக்கு பேராதாயமாகும். உலக மக்களுக்காக அல்லஹ்வையும் அவனின் மார்க்கத்தையும் சமரசம் செய்து கொள்ளும் பல பேரை இன்றைய உலகில் நாம் காணமுடியும். அவர்களின் முகத்தில் ஒளிரும் நூரைக் கொண்டே அல்லஹ்விடம் அவர்களின் மதிப்பை தெரிந்துகொள்ள முடியும். எனவே அல்லாஹ்வின் வாக்குறுதிகள் உங்கள் வாழ்விலும் ஈடேற வேண்டுமென்றால், அவனின் அருகாமையும் பாவ்மன்னிப்பும், சுவனமும் கிட்ட வேண்டுமென்றால், நல்மக்களின் தோழமையை பெறுங்கள். அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடுங்கள். உலக ஆதாயத்திற்காக மார்க்கத்தை சமரசம் செய்து கொள்ளாதீர்கள். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம்மை அவன் விரும்புவோரின் பட்டியலிலும், அவனின் உண்மையான அடியான்கள் விரும்புவோரின் பட்டியலிலும் நம்மை வைப்பானாக. ஆமீன்..

No comments:

Post a Comment