பக்கங்கள்

August 29, 2010

சிந்தனைக்கு இன்று...

ரமதானில் சஹாபாக்களும் திருக்குர்'ஆனும்

  • அல் அஸ்வத்(பின் யாஜித் அன் நாகாய்)(ரஹி) அவர்களைப் பற்றி அறியப்படுவது என்னவெனில், அவர் ரமதானில் இரு இரவுகளுக்கு ஒரு முறை திருக்குர்'ஆனை நிறைவு செய்பவராக இருந்தார். எனவே மக்ரிபிற்கும் இஷாவிற்கும் நடுவில் உள்ள நேரத்தில் தூங்குபவராக இருந்தார். ரமதான் அல்லாத நாட்களில் ஆறு இரவுகளுக்கு ஒரு முறை திருக்குர்'ஆனை ஓதி நிறைவு செய்பவராக் இருந்தார். [அபூ நு'அய்ம், ஹில்யாது அல் அவ்லியா : 1:250]
  • அல் ராபி பின் சுலைமான்(ரஹி) அவர்கள் கூறினார்கள்," முஹம்மது பின் இத்ரீஸ் அஷ் ஷாஃபிஈ(ரஹி) அவர்கள் ரமதானில் அறுபது முறை திருக் குர்'ஆனை ஓதி நிறைவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார், அறுபது முறையும் தொழுகையிலேயே. [அபூ நு'அய்ம், ஹில்யாது அல் அவ்லியா 4:107]
  • அபுல் அஷ் ஹாப்(ரஹி) அறிவித்தார்கள்,"அபு அர் ராஜா(அல் அடருதி)(ரஹி) அவர்கள் திருக்குர்'ஆனை ரமதான் மாத இரவுத் தொழுகைகளில், பத்து இரவுகளுக்கு ஒரு முறை ஓதி நிறைவு செய்வதை வழமையாக கொண்டிருந்தார்கள்" [அபூ நு'அய்ம், ஹில்யாது அல் அவ்லியா 1:348]
  • ஃகததா(ரஹி) அவர்கள் ஏழு இரவுகளுக்கு ஒரு முறை ஓதி நிறைவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அதுவே ரமதான் வந்து விட்டால் மூன்று இரவுகளுக்கு ஒரு முறையும், இறுதி பத்து நாட்களில், ஒரு இரவுக்கு ஓர் முறையும் ஓதி நிறைவு செய்தனர்." [அபூ நு'அய்ம், ஹில்யாது அல் அவ்லியா 1:364]
  • இமாம் புஹாரி(ரஹி) அவர்களைப் பற்றி அறியப்படுவது என்னவெனில், அவர் ரமதானில் ஓர் நாளுக்கு ஒரு முறை திருக்குர்'ஆனை ஓதி நிறைவு செய்பவராக இருந்தார். மேலும் இரவுகளில் தராவீஹ் தொழுகையின்ப்பொது மூன்று இரவுகளுக்கு ஒரு முறை ஓதி நிறைவு செய்வார். [அத் தஹாபி ஸியார் அ'லாம் அன் நுபலா 12:439]

குறிப்பு: இதே போல சில இன்னும் பல சஹாபாமார்களைப் பற்றி தன்னுடைய 'லதா'இஃப் அல் ம'ஆரிஃப் பக்கம் 319'இல் இப்னு ரஜப்(ரஹி) அவர்கள் கூறுவது என்னவெனில், " திருக்குர்'ஆனை மூன்று நாட்களுக்கு குறைய ஓதலாகாது என்னும் தடை, வருடத்தின் மற்றைய நாட்களில் வழக்கமாக ஓதும்போது அமலாகும். ஆனால் மேன்மை மிக்க நாட்கள், ரமதானைப் போல வரும்போது, அதிலும் முக்கியமாக லைலத்துல் கத்ர் இரவு சமீபிக்கின்றது என்று தெரிய வரும்போது, அல்லது இன்னும் மதிப்பும் சிறப்பும் மிக்க உயரிய இடங்களான மக்காவில், யாரெல்லாம் (அங்கு வசிப்பவரல்லர்) மக்காவை வந்தடைகிறார்களோ அவர்களுக்கு திருக்குர்'ஆனை அதிகமதிகம் ஓதுவது பரிந்துரைக்கப்படுகின்றது. இது அந்த நேரத்தையும், அவ்விடத்தின் சிறப்பையும் கொண்டு அதிகமதிகம் பயன் கொள்வதற்காகும். இந்த முடிவை இமாம் அஹ்மது(ரஹி), இஷாக்[இப்னு ரஹூயாஹ்](ரஹி) மற்றும் இன்னும் பல இமாம்கள் ஆமோதிக்கின்றனர். மேலும் சஹாபாக்களின் வாழ்க்கைமுறையை காணும் பொழுது, அவர்களும் அதே கருத்தை கொண்டிருந்தனர் என்பது தெரிய வருகின்றது.

என்னுரை: நம்மில் யார் இந்த மாதத்தில் விசேட சாப்பாடுகள் சாப்பிடுவதை விட்டும், நீண்ட நேரம் தூங்கி எழுவதை விட்டும், இன்னும் பல உபயோகமற்ற செயல்களை விட்டும், திருக்குர்'ஆனுக்கு முக்கியத்துவம் தந்து அதனை இந்தளவு ஓதவும், மனனம் செய்யவும், பயிலவும் முற்படுகிறோம்? முற்பட்டுள்ளோம்? இனி வரும் கடைசி பத்து நாட்களிலாவது அதற்கு முக்கியத்துவம் தருவோமா? இன்ஷா அல்லாஹ்...அல்லாஹ் அவர்களைப் போல நம் வாழ்வையும் ஆக்கிக்கொள்ள வகை செய்வானாக. ஆமீன்.



.

No comments:

Post a Comment