பக்கங்கள்

July 26, 2011

இனிய ரமலானே வருக வருக... வருக.. :)))))))

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 
(அல்குர்ஆன் 2:183) அன்புள்ள சகோதர சகோதரிகளே... 

இனிய ரமலான் மாதம் அடி மேல் அடி வைத்து நெருங்கிக் கொண்டே இருக்கிறது.... மனமுவந்த விருந்தினரை வரவேற்கும் முகமாய், பாசமும், அன்பும், விருந்தோம்பலும், 365 நாட்கள் காத்திருந்த நேரத்தின் வேதனையை மறைக்கும் முகமாய்... அப்பப்பா... எண்ணிலடங்கா எண்னங்களுடன் வாசலை நோக்கியவாறே...உங்களுடன் நானும். 

இந்த வருட ரமலானில் என்னென்ன செய்து விருந்தினரை மகிழ்விக்கலாம் என முடிவெடுத்து விட்டீர்களா??? என் முடிவுகள் இன்ஷா அல்லாஹ் நாளை... நீங்களும் தயார் செய்து கொண்டு வாருங்கள்... நல்லமல்களை ஒரு சேர முயன்று வெல்வோம்... தீயவற்றை தடுப்பதில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம்... இன்ஷா அல்லாஹ்... 

அல்லாஹும்ம பலக்ன ரமதான்..... ஆமீன்... ஆமீன்... அல்லாஹும்ம ஆமீன்... 

:))

1 comment:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  //நல்லமல்களை ஒரு சேர முயன்று வெல்வோம்... தீயவற்றை தடுப்பதில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம்... இன்ஷா அல்லாஹ்...//

  அல்லாஹும்ம பலக்ன ரமதான்..... ஆமீன்... ஆமீன்... அல்லாஹும்ம ஆமீன்...

  இனிய ரமள்தான் நல்வாழ்த்துக்கள்..!

  http://www.moonsighting.com/1432rmd.html

  ReplyDelete