பக்கங்கள்

August 27, 2010

25 வாக்குறுதிகள் - முதல் வாக்குறுதி


சுவர்க்கம் - ஜன்னாஹ்

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்,

நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (திருமறை 2:25)


இமாம் தரும் விளக்கவுரை:
அல்லாஹ் தரும் இந்த ஒரு வாக்குறுதியே முஃமின்களுக்கு போதுமானது. மீதம் உள்ள 24 வாக்குறுதிகளைப் பற்றி எண்ணக் கூட அவகாசம் தராத அளவிற்கு இந்த வாக்குறுதி போதுமானது. ஏனெனில், இந்த வாக்குறுதி சுவர்க்கத்தைப் பற்றியதாகும். சுவர்க்கமும் அதன் பாக்கியங்களும் நம்முடைய தகுதிக்கு மித மிஞ்சினதாகும். இதை யாரும் மறுக்க இயலாது.

என்னுரை:
சுவர்க்கம் எளிதில் கிடைத்துவிடக் கூடிய ஒன்றல்ல. மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டிய ஒன்றாகும். அல்லாஹ்விடமிருந்து இந்த நற்கூலியைப் பெற நாம் கடினமாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பானது, ஈமானை ஒத்ததாகவும், ஷரீ'அத்திற்கு உடன்பட்டதாகவும், ஹலாலான முறையிலும் இருத்தல் வேண்டும். அமல்களில் சிறந்தவை பற்றியும் அதை இன்னும் சிறப்பாக செய்யவும் ஏராளமான ஹதீத்துக்களும் சஹாபாக்களின் வாழ்க்கைமுறையுமே நமக்கு கற்று தரும். எனவே அவ்வித புத்தகங்களை தேடி படித்து நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வோமாக, இன்ஷா அல்லாஹ்..

No comments:

Post a Comment