பக்கங்கள்

August 27, 2010

இன்றைய ஹதீத்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது ஏறினார்கள். ஆமீன் ஆமீன் ஆமீன் என்று கூறினார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, "ஜிப்ரீல் (அலை) அவர்கள், எந்தவொரு அடியான் ரமலானை அடைந்தும் அவனது பாவம் மன்னிக்கப்படவில்லையோ அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும்* என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்றுக் கூறினேன். பிறகு எந்த அடியானிடத்தில் என்னைப் பற்றி சொல்லப்படும் போது அவன் என் மீது ஸலாம் கூறவில்லையோ அவனுடைய மூக்கு மண்ணை கவ்வட்டும்** என்று கூறினார்கள் அதற்கு ஆமீன் என்று கூறினேன். எந்த அடியான் தனது தாய் தந்தையையோ அல்லது இருவரில் ஒருவரையோ பெற்றிருந்தும் சொர்க்கம் செல்லவில்லையோ அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்*** என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்று கூறினேன்" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ர­)
நூல் : பைஹகீ (8767)

* ரமதான் மாதத்தையும் பிற மாதத்தைப் போல எண்ணி அதில் அதிகதிகமாக நற்செயல்கள் செய்யாமலும், அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடும் இபாதத்துகளை செய்யாமலே காலம் கடத்தியவனும் ஆவான்.

**ந‌பிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரை சொல்லும்பொழுதெல்லாம் மற்றும் கேட்கும் பொழுதெல்லாம், ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் என்று கூறவேண்டியது கடமை. அதை தவற விட்டவன் / அலட்சியம் செய்தவன்.

*** தன்னுடைய தாய் தந்தை வயோதிகர்கள் ஆன பின்னரும் அவர்களை தகுந்த முறையில் கவனிக்காமல், பாதுகாக்காமல், சொல் கேளாமல், மதிக்காமல் விட்டவன்
.



.

No comments:

Post a Comment