பக்கங்கள்

August 25, 2010

சிந்தனைக்கு இன்று

அபூ பக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள்," இந்த உலகின் இருள்களும் அவற்றிலிருந்து வெளி வர உதவும் விளக்கொளிகளும் ஐந்து வகையாகும். அவையாவன:
இந்த உலகின் மீதான ஆசை ஓர் இருளாகும், அதன் விளக்கு அல்லாஹ்வின் மேலான தக்வாவாகும்;
பாவங்கள் அனைத்தும் இருள்களாகும், அதன் விளக்கு தவ்பாவாகும்;
கல்லறை ஓர் இருளடைந்த இடமாகும், அதன் விளக்கு 'லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' ஆகும்;
மறுமை ஓர் இருளாகும், அதன் விளக்கு நல் அமல்களாகும்;
மேலும் ஸிராத்துல் முஸ்தகீம் எனும் பாலம் ஓர் இருளாகும், மற்றும் அதன் விளக்கு அல்லாஹ்வின் மீதான அசையா நம்பிக்கையாகும்;"

இப்னு ஹாஜர் அல் அஸ்கலானி(ரஹி)யுடைய 'தீர்ப்பு நாளுக்கு தயாராகுங்கள்' என்னும் புத்தகத்திலிருந்து..

2 comments:

 1. சத்தியமார்க்கம்.காம்
  இஸ்லாம்கல்வி.காம்
  சுவனத்தென்றல்

  ReplyDelete
 2. நன்றி நீடூர் அலி பாய்.
  சத்தியமார்க்கம் தளம் ஏற்கனவே இணைத்துவிட்டேன். இஸ்லாம் கல்வியில் ஜமாத் பிரச்சினை கட்டுரைகளும் இருப்பதால்...தேவையான கட்டுரைகளை மட்டும் இணைத்துள்ளேன். சுவனத்தென்றல் களமும் அருமையாய் உள்ளது. அதனையும் இணைத்துள்ளேன். ஜஸாகுமுல்லாஹு கைர்.

  வ ஸலாம்.

  ReplyDelete