பக்கங்கள்

August 29, 2010

இன்றைய ஹதீத்

லைலத்துல் கத்ரின் குறியீடுகள்:
உபாதாஹ் பின் ஸாமித்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை லைலத்துல் கத்ர் இரவை அறிவது எவ்வாறு என்று வினவினார்கள். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாவது,"லைலத்துல் கத்ர் இரவு ரமதான் மாதத்தின் இறுதி பத்து நாட்களில், ஒற்றப்படை நாட்களில், இருபத்தி ஒன்றோ, இருபத்தி மூன்றோ, இருபத்தி ஐந்தோ, இருபத்தி ஏழோ அல்லது ரமதானின் கடைசி இரவிலோ வரும். யாரெல்லாம் அந்த இரவில், நேர்மையான நம்பிக்கையுடனும், அல்லாஹ்விடத்திலிருந்து நற்கூலி பெறும் சீரிய எண்ணத்துடனும் இபாதத்துகளில்  தம்மை நிலைப்படுத்தி கொள்கிறாரோ அவரின் முந்தைய பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும். அந்த இரவின் குறியீடுகளில் ஒன்று யாதெனில், அது மிகவும் அமைதியான ஒளி பொருந்திய இரவாக இருக்கும்; சூடுமல்லாமல், குளிருமல்லாமல் ஒரு மிதமான தட்பவெப்பநிலை நிலவும்; நிலவானது மாசுமருவற்று ஒளியுடன் பிரகாசிக்கும், ஷைத்தான்களின் மேல் அன்று விண்‍எரி கற்கள் வீசப்படாது, இதே நிலை பகல் தொடங்கும் வரை நிலைக்கும். மேலும் இன்னுமோர் அத்தாட்சி யாதெனில் அன்றைய பகலில் சூரியன் பிரகாசம் பொருந்திய கதிர்வீச்சுக்கள் இல்லாமல் ஓர் முழு நிலவைப் போல் வானில் உதிக்கும். அன்றைய நாளில் சூரியனுடன் ஷைத்தான்க‌ளும் எழுவதை தடை செய்துவிடுவான்."

ஆதாரம்: துர்ரூல் மன்தூர்.

No comments:

Post a Comment